இந்த படத்தை பற்றி கண்டிப்பாக நிறைய விஷயங்கள் சொல்லியே ஆகவேண்டும். நம்ம தமிழ் சினிமாவுக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல படைப்பு. ஒரு சாலிட்டான இன்டர்நேஷனல் கேங்க்ஸ்டர் பிலிம். காமிரா வொர்க் , மியூஸிக் , டேக்னிக்கல் பாயிண்ட் ஆஃப் வியூவில் ரொம்பவும் சிறந்த படம். இந்த படம் கண்டிப்பாக மற்ற எல்லா படங்களுமே பொதுவான ஒரு கதைக்களத்தை மட்டுமே எடுத்து நகர்ந்துகொண்டு இருக்கும்போது கொஞ்சம் புதுமையான வகையில் ஒரு மனிதனுடைய அடிப்படை சுதந்திரம் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையும் சக்திவாய்ந்த பிரிவினையை ஆதரித்து இலாப நோக்கத்தோடு செயல்படுபவர்களால் எப்படி நிறைய அசம்பாவிதங்கள் நடக்கிறது என்பதையும் நேரடியாக தட்டி கேட்க முன்வந்து உள்ளது. இன் கம்பெரிஸன் என்று வரும்போது தலைவா என்ற திரைப்படத்தை நம்மால் கம்பேர் பண்ண முடிந்தாலும் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ஒரு தனித்த திரைக்கதையாக பின்னணியில் சென்றுகொண்டு இருக்க இன்னொரு பக்கம் எமோஷனல்லான கதையின் ஜேர்னி , கபாலியுடைய வாழ்க்கையில் அவர் தேடக்கூடிய ஒரு தேடல். என்று இரண்டு தனித்தனி ஜேனர்ஸ் மிக்ஸ் பண்ணிய விஷயமாக இந்த படம் இருந்தாலும் இந்த படத்துடைய ப்ரொடக்ஷன் வேல்யூவுக்கு மிகவும் சரியான பிரசன்டேஷன் இந்த படத்தில் இருக்கிறது மேலும் சமுதாய பிரிவினையின் மேலே நம்பிக்கையுடன் வைக்கப்படும் ஒரு மாடர்ன் டே விமர்சனமாகவும் இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு கண்டிப்பாக உங்களுக்கு பெரிய தாங்க்ஸ் !
No comments:
Post a Comment