நம்ம வாழ்க்கையில் நிறைய நேரங்களில் நிறைய விஷயங்களை கடவுள் செயல் என்று சொல்லிவிட்டு போவதை தவிர்த்து வேறு எந்த ஆப்ஷனுமே இல்லாமல் போகிறது , நாம் இருக்கக்கூடிய நிலையில் இருந்து கோடு போட்டால் ரோடு போடும் அளவுக்கு அடுத்த நொடியின் அதிர்ஷ்டம் கிடைப்பதாக இருக்கட்டும் , கோலம் போட புள்ளி வைத்தால் நூறு அம்புகள் காலத்தால் தொடுக்கப்பட்டு பயந்து ஓடிப்போக வைக்கும் பிரச்சனைகளாக இருக்கட்டும எல்லாமே நம்ம விதி பண்ணும் பாடுதான். இன்னைக்கு நாம் சந்தோஷமாக இருந்தால் எதிர்காலத்திலும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைக்கு நாம் கவனக்குறைவாக விட்டுப்போன விஷயம்தான் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையாக நம்முடைய கண்களின் முன்னால் வந்து நிற்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் பூதாகரமாகும் நேரங்களில் நாம் காலத்தின் கட்டாயம் என்று விதியை திட்டுவதற்க்கு இப்போதே இந்த நொடியே பிரச்சனைகளை சரிசெய்ய பிரச்சனைகளை எதிர்காலத்தில் உருவாக்கப்போகும் நடப்பு காரணிகளை கண்டுபிடிக்க வேண்டும். இந்த மாதிரி நாம் செய்யும் செயல்களில் பெரிய அளவுக்கு ஈடுபாடு கொடுத்து எதிர்காலத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்துவது கடினமானதுதான். இங்கே எல்லாம் மனிதர்கள் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் வேலைகளை கம்ப்யூட்டர் மெஷின்கள் 35 நொடிகளில் முடித்துவிடுகிறது (கிரியேட்டிவ்வான ஓவியம் வரைதலை கூட எடுத்துக்கொள்ளுங்களேன் !) இந்த மாதிரி மெஷின்களுடன் போட்டி போடவேண்டிய காலத்தில் மனிதர்களை சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின்படி ரொம்ப அக்யூரேட்டாக வேலையை செய்துமுடிக்க சொல்வது இம்பாஸிபில். எப்போதுமே மிஸ்டேக்ஸ்தான் மனிதர்களை உருவாக்கும்.
No comments:
Post a Comment