ஸ்னோபியர்ஸர் என்பது மனித இனம் உலக அளவிலான பனிப்புயலால் அழிந்துகொண்டு இருக்கும்போது கடைசியாக மிஞ்சி இருப்பவர்கள் மட்டுமே வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு இரயில் வண்டி, இந்த வண்டியில் பணக்காரகள் உள்ளே நிறைய அடிமைகளை வேலை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். அதே நேரம் இந்த விஷயம் எதுவுமே தெரியாமல் கையில் எதுவுமே இல்லாமல் சாப்பாட்டுக்காக அந்த இரயிலில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாள் கதாநாயகன் இந்த அநியாயமான விஷயங்களை எதிர்த்து போராடுகிறார் எதுதான் படத்தின் கதை இந்த படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதால் கண்டிப்பாக மெச்சூரிட்டி நிறைந்த பெரியவர்கள் மட்டுமே பார்ப்பது நல்லது. கண்டிப்பாக கிரிஸ் எவான்ஸ் ரொம்ப தரமான நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படம் பார்க்கும்போது எனக்கு இன் டைம் என்ற ஹாலிவுட் படம்தான் நினைவுக்கு வருகிறது. இந்த படம் ரொம்ப எக்ஸ்பென்ஸிவ் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஒரு போஸ்ட் அபாக்கலிப்ஸ் படத்துக்கு தேவையான எல்லா விஷயங்களையும் கொண்டு இந்த படம் இருப்பதால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கிளைமாக்ஸ் டிஸப்பாயிண்ட்மெண்ட்தான் ஆனால் கதைக்கு தேவைப்பட்டு இருந்ததால் கதையோடு பொருத்தமாக இருக்கிறது. இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் அல்லது பிடிக்காது என்ற வகையில் விமர்சகர்களையே இரண்டு பாகமாக பிரித்தாலும் பிரித்துவிடும் அந்த அளவுக்கு ஒரு படம். கண்டிப்பாக பாருங்கள். ஒரு போஸ்ட் அபாக்கலிப்ஸ் படமாக நமக்குள் இருக்கும் கொஞ்சம் மனித தன்மையையும் இழந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயமாக நான் என்ன சொல்லுவேன் என்றால் எப்போதுமே மனிதர்களை கஷ்டப்படுத்தி துன்புறுத்தி வாழவேண்டாம். ஒரு நாள் கோபம் வந்தால் உங்களுக்கு சொந்தமான எல்லா விஷயங்களும் நீங்கள் கஷ்டப்படுத்திய ஆட்களால் உடைத்து நொறுக்கப்படும். இந்த கதை 2019 களில் நெட்ஃப்லிக்ஸ் தொடராகவும் வெளிவந்தது.
No comments:
Post a Comment