Sunday, December 10, 2023

GENERAL TALKS - பொதுவாக நோட்ஸ் மற்றும் ரெகார்ட்ஸ் இருப்பது ரொம்ப பெரிய அட்வாண்டேஜ் !

 நிறைய நேரங்களில் நீங்கள் செய்யக்கூடிய அனைத்து வகையான செயல்களுக்கும் நோட்ஸ் எடுத்து வைத்துக்கொள்வதோ அல்லது போதுமான ரேக்கார்ட்ஸ் மெயின்டய்ன் பண்ணுவதோ நான் ரொம்ப ரெக்கமேன்டேஷன் பண்ணும் ஐடியா , காரணம் என்னவென்றால் நம்ம மூளையின் கான்ஸியஸ் மெமரியாக இருந்தாலும் சரி, சப்-கான்ஸியஸ் மெமரியாக இருந்தாலும் சரி , நம்ம மனித வாழ்க்கையில் நம்முடைய மெமரி கெப்பாஸிட்டி ரொம்ப கொஞ்சமானதுதான். இங்கே யாருக்குமே போதுமான இண்டெக்ரேஷன் அவங்களுடைய மனதுக்குள் இல்லை. இந்த மாதிரியான இண்டெக்ரேஷன் மனதுக்குள் கொண்டுவரவேண்டும் என்றால் அபாரமான நினைவுத்திறன் வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாதிரியான நிலைதான் உங்களுடைய உலகத்தில் இருக்கிறது என்பதால் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா செயல்களுக்குமே நீங்கள் ஒரு பூட்டு போடப்பட்ட ஆவணம் (கம்ப்யூட்டர் ஆவணம்) அல்லது பூட்டு போடப்படாத ஆவணம் (பணிநேர நாட்குறிப்பு) போன்ற விஷயங்களை பயன்படுத்துவதை கண்டிப்பாக நான் பரிந்துரை பண்ணுகிறேன். குறிப்பாக நோட்ஸ் எடுத்துக்கொள்ளும்போது முடிந்தவரைக்கும் 100 சதவீதம் உங்களுக்கு தேவையான எல்லா விஷயமும் நோட்ஸ்ஸில் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய நோட்ஸ் என்பது ஒரு LOG போன்றது. இந்த மாதிரியான இன்ஃபர்மேஷன் பேக்கேஜ் உங்களுடைய வாழ்க்கையில் எப்போதுமே உதவியாக இருக்கக்கூடிய ஒரு விஷயம். இன்னொரு முக்கியமான விஷயம். உங்களுடைய வாழ்க்கையை ரெகார்ட் பண்ணுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இந்த விஷயத்தை தொடங்கினால் சாகும்வரைக்கும் நீங்கள் இந்த விஷயத்தை செய்துதான் ஆகவேண்டும். வெந்தும் வேகாத விஷயமாக {ஹால்ஃப் பிராஸஸட்) இந்த விஷயத்தை செய்யப்பொகிறீர்கள் என்றால் இந்த விஷயத்தை நீங்கள் செய்யவே வேண்டாம். இப்போது இந்த கான்சேப்டக்கு சம்மந்தமே இல்லாத கான்செப்ட் ஒன்றை சொல்லபோகிறேன் இந்த உலகத்தில் நீங்கள் யாரையாவது ஏமாற்றிக்கொண்டு இருந்தால் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள் , இருளில் அறியாமையில் இருப்பவர் கடைசிவரைக்குமே அறியாமையில் இருக்கப்போவதும் இல்லை , வெளிச்சத்தில் அறிவுப்பூர்வத்தில் இருப்பவர் கடைசி வரைக்குமே அறிவுப்பூர்வமாக இருக்கப்போவதும் இல்லை. இன்றைக்கு நீங்கள் செல்வம் நிறைந்தவர்களாக இருப்பதால் நீங்கள் கடவுள் நிலைக்கு உங்களை கொண்டுசென்றுவிடவேண்டாம். எப்போதுமே பொருட்கள் நீங்கள் பயன்படுத்த வேண்டிய விஷயம். பொருட்கள் உங்களை பயன்படுத்திக்கொள்ள நீங்கள் அனுமதிக்க கூடாது. 




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...