திங்கள், 18 டிசம்பர், 2023

CINEMA TALKS - BACHELOR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படம் கண்டிப்பாக ஃபேமிலியோடு பார்க்க ரெகமண்ட் பண்ண மாட்டேன். இந்த படத்தின் ரொமான்டிக் காட்சிகள் தாறுமாறாக இருக்கும். இந்த கதையில் மொத்தமாக ஜி. வி. பிரகாஷ் நெகட்டிவ் ரோல் எடுத்து வேற லெவல்லில் நடித்து கொடுத்து இருப்பார். அதுவே எனக்கு பேர்ஸனலாக பிடித்து இருந்தது, இந்த படத்துடைய காமிரா வொர்க் மொத்தமாக ஒரு மலையாளம் சினிமா பார்ப்பது போலவே அவ்வளவு வண்ணமயமாக இருந்தது. நம்ம ஸ்டாக் லெவல் திரைக்காட்சிகளை விட ஒரு படி மேலே இருந்த காமிரா வொர்க் இந்த படத்தை அடுத்த லெவல்க்கு கொண்டுபோயிருக்கிறது என்றும் சொல்லலாம். நமது கதாநாயகர் கதாநாயகியை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றிவிடுகிறார். ஆனால் கதாநாயகி எவ்வளவோ கெஞ்சியும் அவருடைய குழந்தைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்ளவில்லை. முறைப்படி திருமணம் பண்ணவும் மறுத்துவிடுகிறார். கதாநாயகியின் உறவினர்கள் நேரடியாக வழக்கு தொடர அடுத்து நடக்கும் விறுவிறுப்பான திரைக்கதை இந்த படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்று சொல்லலாம். உண்மையான அன்பு இல்லாத ஒருவனை காதலித்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை நேரடியாக கதையில் பதிவு செய்து இருக்கிறார் என்பதால் இன்றைய கால இளைஞர்கள் மற்றும் காதலிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம். நிறைய மெச்சூரிட்டி இருக்கும் ஆடியன்ஸ் மட்டுமே புரிந்துகொள்ளும் அளவுக்கு படம் இருக்கிறது. நீங்கள் இந்த படத்துக்கு குடும்பம் குழந்தைகள் பெரியவர்களுடன் சேர்ந்து பார்த்து கடைசியில் உங்கள் மேலே விவாகரத்து வழக்கு தொடர வேண்டிய நிலை உங்கள் வாழ்க்கைக்கு வந்தால் அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது. மொத்ததில் இந்த ஜேனரேஷன்க்கு ஏற்ற பெஸ்ட் படம். மேலும் நிறைய படங்களில் ஸ்பெஷல்லான விஷயம் கதையில் கதாநாயகர்களாக நடிக்கும் கதாப்பாத்திரங்களின்  சிறப்பான நடிப்பு திறன்தான், இந்த படத்திலும் அவ்வளவு சிறப்பான நடிப்புத்திறன் இருப்பதால்தான் படம் வெற்றி அடைந்து இருக்கிறது.  இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...