Monday, December 18, 2023

CINEMA TALKS - BLUE BEETLE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


 ஒரு பணத்துக்கு கஷ்டப்படும் மெக்ஸிக்கன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சராசரி பையன் நம்முடைய கதாநாயகன். இவருடைய குடும்பம் கஷ்டத்தில் இருப்பதால் இவரால் படிப்பு முடிந்தாலும் சரியான வேலை கிடைக்காமல் இருக்கிறார். இன்னொரு பக்கம் கார்ட் இன்டஸ்ட்ரிஸ் என்ற பெரிய நிறுவனம் ஒரு உயிருள்ள வேற்று கிரகத்தை சார்ந்த ஆயுதத்தின் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கிறது. இந்த ஆராய்ச்சி மட்டும் சக்ஸஸ் ஆனால் யாராலும் அழிக்க முடியாத ஒரு பெரிய படையை உருவாக்கி உலகத்தை ஆளலாம் என்று கதாநாயகியின் அத்தை ஒரு பயங்கரமான பிளான் போட்டு வைக்கவுமே கதையில் டுவிஸ்ட்டாக இந்த குறிப்பிட்ட ஏலியன் டெக்னாலஜி நம்முடைய அப்பாவி கதாநாயகன் உடலில் நிரந்தரமாக இணைந்துவிடுகிறது. இப்போது கதாநாயகன் ஒரு பெரிய கார்ப்பரேட் டெக்னாலஜி நிறுவனத்தின் கூலிப்படையை எதிர்த்து அவனுடைய குடும்பத்தையும் காதலியையும் காப்பாற்ற வேண்டும். சொதப்பல் இல்லாமல் எல்லாமே சரியாக முடிந்ததா என்பதுதான் படத்தின் கதைக்களம். சொல்லப்போனால் நிறைய நாட்களுக்கு பிறகு டிஸி காமிக்ஸ் வெளியீட்டில் மிகவும் தரமான படம் , சண்டை காட்சிகள் ரொம்பவுமே பிரமாதம், இருந்தாலும் மார்வேல் காமிக்ஸ் படங்கள் ஸெட் பண்ணிவைத்த ட்ரேண்டை இன்று வரைக்கும் டிஸி படங்கள் ஃபாலோ பண்ணிக்கொண்டே இருக்கின்றன , ஒரு சூப்பர் ஹீரோ படமாக கதை நன்றாக இருந்தது , ஹீரோ கெத்து , ஆனால் ஹீரோவின் குடும்பம் வேற லெவல் , மட்டமான சிரிப்பு காமெடி , சட்டை இல்லாத காட்சிகள் இது எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம் , மற்றபடி கலகலப்பான ஒரு ஆக்ஷன்க்கு பஞ்சம் இல்லாத ஒரு சூப்பர் ஹீரோ படம் , அடுத்த பாகம் வருகிறதா என்பது கடவுளுக்கே வெளிச்சம், ஒரு கதையே இல்லாமல்தான் இப்பொது எல்லாம் நமது தலைவரிடம் இருந்து படம் வருகிறது, ஆனால் சோனியின் வெனம் , மார்பியஸ் , போன்ற படங்களோடு சேர்த்து பார்த்தால் 10 மடங்கு பெட்டர்ரான படம். ஆடியன்ஸ் வரவேற்பு கண்டிப்பாக இந்த படத்துக்கு கொடுத்து இருக்க வேண்டும். இந்த படத்தை போல நம்ம வலைப்பூக்களுக்கு ஆதரவு கொடுக்காமல் இருக்க வேண்டாம். வலைப்பூவை கிளிக்கோ கிளிக்கென்று கிளிக்குங்கள் !! - NICE TAMIL BLOG #திரை விமர்சனம் #சூப்பர்ஹீரோ 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...