Tuesday, December 19, 2023

CINEMA TALKS - ALAIPAYUTHE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் இருந்து ஒரு திரைப்படம் என்றால் அந்த படம் எவ்வளவு பெஸ்ட்டாக இருக்க வேண்டுமோ அவ்வளவு பெஸ்ட்டாக இருப்பதை நீங்கள் எதிர்பார்த்து பார்க்கலாம். இந்த படத்தின் கதை ரொம்ப சாஃப்ட்டான ரொமான்டிக் டிராமாதான். சாஃப்ட்வேர் துறையில் ப்ராஜக்ட் பண்ணிக்கொண்டு இருக்கும் ஒரு பையன் ஒரு மெடிக்கல் கல்லூரி மாணவியை சந்தித்து பின்னாட்களில் சந்திப்பு காதலாக மாறவே திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் என்னென்ன திருப்பங்கள் இருக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என்றாலும் எக்ஸ்ஸிக்யூஷன் ரொம்ப ரொம்ப பிரமாதம். மேலும் இந்த படத்தை ரொமான்டிக் காமெடி என்று எல்லாம் சொல்லிவிட முடியாது. ஒரு ஃப்யுர்ரான ரொமான்ஸ் படம். வெவ்வேறு குடும்பத்தில் மாறுபட்ட வாழ்க்கை முறையில் வாழ்த்த இரு கதாப்பத்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேசி பழகி காதலை டெவலப் பண்ணி வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கொண்டு பின்னாட்களில் வீட்டுக்கு தெரிந்து பிரச்சனை ஆனதுமே தனியாக பிரிந்து வந்து தனியாக இடத்தில் தங்கி வேலை செய்து பணம் சம்பாதித்து குடும்பத்தை கொண்டுபோவது என்று ஒரு ஒரு கட்டத்திலும் வாழ்க்கையில் என்ன நடக்குமோ அப்படியே எல்லாமே ரியல்லிஸ்டிக்காக இந்த படத்தில் இருக்கும். மேலும் நிறைய லொகேஷன்ஸ். பெண்களுடைய கதாப்பத்திரங்களுக்கு ரொம்ப பெரிய கேரக்டர் டெவலப்மென்ட் கொடுத்து இருப்பது எல்லாமே இந்த படத்தின் நிறைய பிளஸ் பாயிண்ட். ஒரு கன்வேன்ஷனல் மூன்று பாகத்தின் கதையில் ஒரு அருமையான டைம்லேஸ் கதை இந்த அலைபாயுதே என்ற திரைப்படம் !! பாடல்கள் பெஸ்ட் ஆஃப் பெஸ்ட். AR ரகுமான் வேற லெவல்லில் பாடல்கள் கம்பொஸ் பண்ணி இருக்கிறார். இந்த படத்தின் மேக்கிங் ஸ்டைல் இன்னைக்கு வரைக்கும் நிறைய இயக்குனர்களுக்கு பெஞ்ச்மார்க் என்றே சொல்லலாம் !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...