இந்த படம் ஒரு கமர்ஷியல் ரொமான்டிக் காமெடி படமாக இருப்பதால் கண்டிப்பாக இந்த படத்தில் லாஜீக் எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம் , இந்த வாழ்க்கையில் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை , எனக்கு நிறைய சொத்துக்கள் இருப்பதால் கவலையே இல்லாமல் இருக்க வேண்டும் என்று வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு வாலிபர்தான் நமது கதாநாயகர் தினேஷ் , உறவினரின் திருமணத்தில் வந்திருக்கும் ஷோபா எப்படியோ நிறைய விஷயங்கள் நடந்து தினேஷ்ஷின் கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணிய பிளான்னில் மாட்டிக்கொண்டு ஹாஸ்பிட்டலில் இருக்க அப்போது பேச ஆரம்பிக்கும் தினேஷ் கொஞ்சம் கொஞ்சமாக ஷோபாவிடம் மனதை பறிகொடுக்கிறார். பின்னாட்களில் தினேஷ் எப்போதுமே தன்னை மாற்றிக்கொள்ளாத கதாப்பாத்திரமாக இருப்பதால் அவருடைய கெட்ட பழக்கங்களை விடவேண்டும் என்பது நடக்காத காரியம் என்று புரிந்து தினேஷ் மற்றும் ஷோபா பிரிந்துவிட கிளைமாக்ஸ் வரைக்கும் சென்று இந்த காதல் கதை எப்படி சேர்ந்தது என்றுதான் இந்த படத்தின் கதை. உங்களுக்கு கமர்ஷியல் படம் பிடிக்கும் என்றால் இந்த படம் உங்களுக்கு நல்ல சாய்ஸ் , மற்றபடி கமர்ஷியல் படங்களை விட வேற மாதிரி கதை அம்சம் உள்ள படம் வேண்டும் என்றால் ஒரு பாஸபில் எண்டர்டெயின்மெண்ட்டாக இந்த படத்தை பார்க்கலாம். ஒரு கமர்ஷியல் படம் என்ற பாயிண்ட் ஆஃப் வியூவில் நல்ல படம் இந்த படம். இதன் பின்னால் உங்கள் சாய்ஸ்தான். நிறைய படங்களில் ஸ்பெஷல்லான விஷயம் கதையில் கதாநாயகர்களாக நடிக்கும் கதாப்பாத்திரங்களின் சிறப்பான நடிப்பு திறன்தான், இந்த படத்திலும் அவ்வளவு சிறப்பான நடிப்புத்திறன் இருப்பதால்தான் படம் வெற்றி அடைந்து இருக்கிறது. இந்த படம் மலையாளத்தில் வெளிவந்தாலும் நம்ம ஸ்டேட்டில் கொடுத்த ஆதரவு வேற லெவல். இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
No comments:
Post a Comment