Saturday, December 9, 2023

GENERAL TALKS - YEAR IN REVIEW - 2023 - TAMIL ARTICLE - ஒரு தமிழ் கட்டுரை !!!

 பொதுவாக தமிழ் கட்டுரை எழுதுவது என்பது உண்மையில் நம்ம மொழியில் ரொம்ப சுதந்திரமான முறையில் செய்ய வேண்டிய விஷயம். பள்ளிக்கூடங்களில் நிறைய இடங்களில் இந்த பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டியை ரொம்ப சாதாரணமான விஷயமாக எங்கையோ ஒரு இடத்தில் இருந்து காப்பி அடித்து சொல்லிவிடுகிறார்கள். இது விஷயமாக நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு விஷயம் சொல்லவேண்டும் ! மரங்களை பாதுகாப்பது என்பது குறித்த ஒரு பேச்சு போட்டியில் "மரங்களை நடுவதையும் பாராமரிப்பதையும் அரசாங்க வேலையாக அறிவித்து சம்பளம் கொடுக்க வேண்டும்" என்று ஒரு கருத்தை பேசினேன். இங்கே எழுதி வைத்ததை படிப்பதை விட்டுவிட்டு அரசாங்கத்துக்கு அட்வைஸ் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாரா என்ற ஒரு கருத்து அப்போது வந்தது. இதுதான் கருத்து சுதந்திரம். இங்கே நான் கௌரவக்குறைவு இல்லாத கருத்துக்களை எதுவுமே சொல்லவில்லையே ? நான் சொன்னது ஒரு யோசனை ! டெக்னிக்கலாக பாஸிபில் இல்லாமல் இருந்தாலும் அதுவும் ஒரு யோசனைதான் ! இன்றைக்கு நான் எதிர்பார்த்த அளவுக்கு பார்வைகள் இந்த வலைப்பூவில் இல்லை என்றாலும் இந்த வலைப்பூ ஒரு நாளில் வரலாற்றில் இடம்பெறும் என்பதுதான் என்னுடைய கணிப்பு. என்னுடைய கணிப்பு எப்போதுமே தவறாக போனது இல்லை. இப்போது இயர் இன் ரேவ்யூ பார்க்கலாம். இந்த வருஷம் ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லிஜேன்ஸ்ஸின் வருஷம் என்று தாராளமாக சொல்லிவிடலாம். இன்டர்நெட்டில் AI உதவியுடன் கணக்கு இல்லாமல் ஃபைல்கள் குவிந்து வருவதால் வெப்ஸைட்கள் கனக்கே இல்லாமல் ஹார்ட் டிஸ்க்களை வாங்கிப்போட வேண்டும் போதாக்குறைக்கு கிரிப்டோ வேறு கணக்குகளை போட்டு வைக்க ஒரு பெரிய சைஸ் நோட்டு புத்தகம் போல ஹார்ட்டிஸ்க்களை நிரப்பிக்கொண்டு இருக்கிறது. இந்த காலத்தில் ஒரு நிஜமான குழந்தையின் முகத்தை பார்ப்பதை விட அந்த முகம் காமிராவில் நன்றாக பதிவு பண்ணப்படுகிறதா என்பதைத்தான் கவனமான முறையில் பார்க்கிறார்கள். இங்கே உலக அரசியல் பற்றி சொல்லவேண்டும் என்றால் இங்கே யார் சண்டை போடுபவர்களில் பெரிய அணியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோருமே பயந்து சப்போர்ட் பண்ணுவார்கள். சின்ன அணியில் இருப்பவர்களிடம்தான் நீதியும் நேர்மையும் நியாயமும் இருந்தாலும் அவர்களோடு சேர்ந்து இருந்தால் தோற்றுப்போய்விடுவோம் என்று நினைக்கிறார்கள். இது சம்மந்தமாக வாரன் பஃபேட் சொன்ன ஒரு கருத்துதான் எனக்கு நினைவுக்கு வருகிறது !! "யூ கான்ட் மேக் அ குட் டீல் வித் அ பேட் பேர்ஸன்" - நீங்கள் ஆதரவு கொடுப்பது தப்பான பேர்ஸன்க்கு என்று ஒரு நாளில் நீங்கள் புரிந்துகொள்ளும் காலம் வரும் அப்போதுதான் உங்களுக்கு காலம் சரியான கிளாஸ் எடுக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இந்த காலத்தில் நமது வாய்க்குள்ளும் நமது வயிற்றுக்குள்ளும் என்ன செல்கிறது என்பதை நாம் கவனிக்க மறுக்கிறோம். நல்ல கொழுப்பு / கெட்ட கொழுப்பு என்ற பிரச்சனை ஒரு பக்கம் போகட்டும் செயற்கை சுவை , நிறம் , மணம் தரும் கெமிக்கல்களின் பயன்பாடு சாப்பாட்டில் அதிகமாகிவிட்டது. இந்த ஃபேன்ஸி உணவுகளை நம்ம வாழ்க்கையில் இருந்து எடுக்க வேண்டும். இதுக்கும் ஏதாவது பண்ண வேண்டும். விவசாயிகள் விளையவைக்கும் பயிர்களுக்கு செல்ல வேண்டிய காசு , வெறும் ஃப்ளேவர் போடப்பட்ட சர்க்கரை தண்ணியை பாட்டில்லில் அடைத்து குடிப்பதற்க்கு செல்ல கூடாது. இங்கே நிறைய பேர் கணினி வேலைகளை செய்ய காரணம் இந்த வருடத்தை பொறுத்த வரைக்கும் செல்வ செழிப்புள்ள உயர்ந்த பிறப்புகள் நிறைய பாவங்களை செய்துகொண்டே இருக்கிறார்கள், அவர்களுடைய பாவங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டிய சிஸ்டமே அவர்களுடைய பாவங்களுக்கு ஆதரவையும் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து நகைத்து அவர்களுக்கு இன்னுமே பாதிப்பு கொடுக்கதான் யோசிக்கிறது. இந்த வருடத்தில் நான் பார்த்த ரொம்ப கஷ்டமான விஷயம் பொழுதுபோக்கு துறைகளுக்கு காசு அதிகமாக கொண்டுவந்து கொட்டுவதையும் அடிப்படையான சின்ன சின்ன தொழில்களுக்கு சப்போர்ட் இல்லாமல் சில்லறை தேறாமல் இருப்பதும்தான். இப்போது எல்லாம் இணைய-ரேயாக்ஷான் வீடியோக்கள் பண்ணுபவர்களுக்கு காசு கொட்டுகிறது ஆனால் சொந்தமாக கன்டன்ட் கொடுப்பவர்களுக்கு கொஞ்சமும் ஆதரவு கிடைப்பதே இல்லை. கிளைமேட் சேஞ்ச் என்று பார்த்தால் இந்த வருஷம் மற்ற எல்லா வருடங்களையும் விட மோசமான வருஷம். கொடூரமான வெயில் மற்றும் வெள்ளம் நிறைந்த புயல் மழை என்று நாம் பண்ணி வைத்த சுற்றுச்சூழல் மாசுக்கள் வீண்போகவில்லை. இந்த உலகத்தை பாதுகாக்க இன்னைக்கு ஆரம்பித்தால் கூட பல வருடங்கள் ஆகலாம். இங்கே கடைசியாக என்ன சொல்கிறேன் என்றால் டிஜிட்டல் விஷயங்கள் எக்கனாமிக்ஸ்க்கு எதுவுமே கொடுப்பது இல்லை. எல்லோருமே விவசாய நிலத்தை விற்றுவிட்டு கிடைக்கும் காசில் யூட்யூப் சேனல் ஆரம்பித்து பேக்கை மாட்டிக்கொண்டு உலகத்தை சுற்ற ஆரம்பித்து விட்டால் விவசாயத்தை விட அதிகமாக பணம் கிடைக்கும் என்றால் உணவு விலை தாறுமாறாக அதிகமாகும். மனிதன் எக்கனாமிக்ஸ்ஸை அடிக்க வேண்டும் என்று நினைப்பது அவனுக்கு அவனே கல்லறை செய்துகொள்வதற்கு சமமானது. உடனடி நடவடிக்கைகள் மற்றும் நிறைய செயல்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் எடுக்க வேண்டும் இல்லை என்றால் கடைசியில் பேரழிவு நடக்கும் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...