இந்த கட்டுரை மூலமாக நான் உங்களை உங்களுடய பாதுகாப்பு வட்டத்தில் இருந்து வெளியே வரச்சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. இருந்தாலும் உங்களுடைய பாதுகாப்பு வட்டத்திலேயே காலம் முழுவதும் வாழமுடியாது. அப்படி வாழ்ந்தால் உலகத்தில் யாருக்கோ நடக்கும் பிரச்சனைக்கு நான் எதுக்கு சண்டைபோட வேண்டும் என்று கோபப்படுவதையே மறந்துவிடுவோம். நமக்கு கிடைத்த வாழ்க்கை நலமான வாழ்க்கையாக இருந்தால் போதும் இனிமேல் எந்த முன்னேற்றமும் பண்ணவே வேண்டாம் என்று ஒரு முடிவை எடுக்கவேண்டாம் ! முன்னேற்றங்கள் இருக்க வேண்டும். GTA VICE CITY என்ற கணினி விளையாட்டில் ஒரு ஒரு முறை நம்ம கதாநாயகன் TOMMY VERCETTI க்கு ஆபத்து என்றபோதும் WASTED ஆகும்போதும் முடிவில் ஹாஸ்பிட்டல் வாசலில் நமது கதாநாயகர் கொண்டுவந்து 100 ❤ - என்ற உடல் நலத்துடன் மறுபடியும் வெளியே அனுப்பப்படுவார் ஆனால் உண்மையான வாழ்க்கையில் அப்படி நடக்காது.
பொதுவாக ஒரு மனிதர் ஹாஸ்பிட்டலில் இருந்தால் போதுமான சாப்பாடு , தூக்கம் , ஓய்வு , மற்றும் பொழுதுபோக்கு கிடைக்கும். பணம் இருக்கும் என்ற வகையில் வேலைக்கு போக வேண்டிய சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாதிரியான கம்ஃபர்ட்டான இடம் உங்களுக்கு ஒரு மனிதன் வாழ்வதற்கு தேவையான விஷயங்களை எல்லாம் கொடுக்கலாம் ஆனால் கடைசி வரைக்குமே இதே மாதிரியான ஒரு இடத்தில் வாழ்ந்துவிடலாம் என்று முடிவு எடுத்தால் அதுதான் தப்பான முடிவு. இது சும்மா ஒரு உதாரணத்துக்கு சொல்லவேண்டும் என்றால் GTA ன் TOMMY VERCETTI யை கடைசி வரைக்கும் ஹாஸ்பிடல் வாசலில் நிற்க வைப்பது போன்றதாகும். வாழ்க்கைக்கு ஒரு பேர்ப்பொஸ் என்பதே கிடையாது.
கடவுளுடைய படைப்பில் நாம் எல்லாம் சோதனை எலிகள் போன்றவர்கள். நாம் ஏதாவது பண்ணிக்கொண்டே இருந்தால்தான் கடவுளின் கவனம் நமது மேல் இருக்கும் எதுவுமே பண்ணவில்லை என்றால் அசையாமல் தூங்கிக்கொண்டு இருந்தால் கடவுளுக்கு நம் மேலே கவனம் குறைந்துவிடும். நாம் ஏதாவது சாதனைகளை செய்து செய்து கடவுளுடைய ஆதரவை பெறவேண்டும் என்பதற்காகத்தான் சாதிக்க இவ்வளவு பெரிய இடத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார். இங்கே சாதிப்பது கஷ்டம்தான் நான் இல்லை என்று சொல்லவில்லை. அந்த கஷ்டத்தை படுவதுதான் நம்ம வாழ்க்கையின் பெர்ப்பொஸ் என்றால் அதனை விட்டு வெளியே வருவது நாம் செய்யக்கூடாத ஒரு செயல்.
நீங்கள் இருக்கும் இடத்திலும் உங்களை சுற்றி இருக்கும் மனிதர்களும் உங்களுக்கு ஆதரவு கொடுத்தால்தான் உங்களால் மேலே வர முடியும் , இல்லையென்றால் உங்களோடு எப்போதும் சண்டைபோட்டுக்கொண்டு இருந்தாலோ அல்லது நீங்கள் கால் வைக்கும் இடத்தில் எல்லாம் வழுக்கிவிழுந்துவிடவேண்டும் என்று ஆயிலை கொட்டிக்கொண்டு இருக்கும் ஆட்கள் இருந்தாலோ நீங்கள் முன்னேற முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கு சப்போர்ட் கொடுக்க வேண்டிய இடமே உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கிறது என்றால் அந்த இடத்தை விட்டு வெளியே வருவது நல்லது. இந்த விஷயத்தை நீங்கள் இன்னும் சிம்பிள்ளாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கடவுளாகவே இருந்தாலும் உங்களுடைய இடமான கோவிலில்தான் இருக்கவேண்டும். இல்லை என்றால் மதிக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment