Saturday, December 23, 2023

CINEMA TALKS - SETHUPATHI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


இந்த படம் பேர்ஸனலாக எனக்கு ரொம்பவுமே பிடித்த படம். காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் உண்மையில் என்ன நடந்தது என்று நேர்மையான காவல்துறை அதிகாரி சேதுபதி நிறைய விசாரணைகளுக்கு பின்னால் பின்னணியில் நடந்த சதிகளை கண்டறிகிறார். ஒரு பக்கம் நேர்மையான கோபமான காவல்துறை வாழ்க்கையால் எதிரிகளால் எப்போதுமே வெறுக்கப்படும் ஒரு அதிகாரியாக இருக்கும் சேதுபதியை பாதிக்கவேண்டும் என்று எதிரிகள் திட்டமிட ஒரு கட்டத்தில் தவறுதலாக நடந்த விபத்தால் காவல்துறை கஸ்டடியில் இருந்த ஒரு சிறுவனுக்கு அடிபடவுமே வில்லன்கள் இந்த ஒரு விஷயத்தை பயன்படுத்தி சேதுபதியின் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை கொடுக்கின்றனர். துணிவாக எதிர்கொள்ளும் சேதுபதி எப்படி இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து அந்த கொடியவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. சிறப்பான திரைக்கதை , சூப்பர் ஹிட் பாடல்கள் , ரசிக்கும்படியான பின்னணி இசை. படத்தொகுப்பு கம்பெரிஸன் இல்லாத வின்னர்ராக இருக்கிறது. இதனை விட இந்த படத்துக்கு என்ன சொல்ல வேண்டும் !! இந்த மாதிரியான படங்கள் எப்போதுமே மறுபடியும் மறுபடியும் பார்க்கலாம் என்ற அளவுக்கு தரமான பிரசன்டேஷன் கொடுத்து இருக்கிறது. ஒரு நல்ல பிலிம் மேக்கிங்குக்கு  இந்த படம் ரொம்ப பெஸ்ட்டான எக்ஸ்ஸாம்பில். !! இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...