Wednesday, December 13, 2023

CINEMA TALKS - SALIM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


விஜய் ஆண்டனி அவர்கள் நடித்து வெளிவந்த 2012 இன் "நான்" என்ற திரைப்படத்துக்கு அடுத்த பாகம் அல்லது இங்கே எப்போதுமே தவறுகள் நடக்கும்போது கேள்விகள் கேட்பதற்கும் நேரடியாக குற்றங்களை எதிர்த்து சண்டை போடுவதற்க்கும் வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும். இங்கே மனிதர்களுடைய கோபம் அதிகமாகும்போது சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ளும் கட்டாயம் உருவாகிறது என்பதுதான் சலீம் திரைப்படத்தின் கதைக்களம். ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்துக்கொண்டு இருக்கும் டாக்டர் சலீம் அங்கே நிர்வாகத்தால் பணம் வசதி இல்லாத நோயாளிகளுக்கு அதிகமான பண செலவை உருவாக்கி ஹாஸ்பிடல்லை முன்னேற்றவேண்டும் என்றும் இல்லை என்றால் வேலை போய்விடும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகிறார். இருந்தாலும் சலீம் நேரமையாக வேலை செய்து பணம் இல்லாதவர்களுக்கும் உதவிய காரணத்தால் அவருடைய வேலை போகிறது. அவருடைய திருமண நிச்சயதார்த்தமும் நின்றுபோகிறது வாழ்க்கையை வெறுத்த சலீம் அவரால் மருத்துவமனையில் அட்மிட் பண்ணப்பட்ட இளம்பெண் மற்றும் அவருடைய குடும்பம் அரசியல் பலம் உள்ள ஒரு குடும்பத்தின் பையங்களால் கொலைசெய்யப்பட்டுவிட்டனர் என்று தெரிந்ததும் அவருடைய உயிரை பணயம் வைத்தாவது அந்த கொலைகார இளைஞர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி களத்தில் இறங்குகிறார். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் இந்த சலீம் படத்தின் கதை. இந்த படம் நமது சினிமாவில் வெளிவந்த ஒரு பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் ரிவேன்ஜ் டிராமா படம். ஒரு முறை கண்டிப்பாக பாருங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...