Tuesday, December 12, 2023

GENERAL TALKS - இங்கே வார்த்தைகளை கொடுக்கும்போது கவனம் தேவை !

 



யாராவது ஒருவருக்கு வார்த்தையை கொடுத்துவிட்டு அந்த வார்த்தையை நம்மால் கடைசிவரைக்கும் நிறைவேற்ற முடியாமல் போனால் அங்கே நம்முடைய மனதின் பாரம் அதிகமாக உள்ளது. இது என்னுடைய பேர்சனல் லைப்ல நடக்கும் விஷயம் ரொம்ப சமீபத்தில் ஒருவருடைய வாழ்க்கையில் நான் நல்ல மாற்றங்களை கொண்டு வருவேன் என்று வாக்கு கொடுத்தேன். இதனால் நான் வாக்கு கொடுத்தவர் சந்தோஷமாக இருந்தார். ஆனால் எனக்கு வேலை அதிகமாக இருந்தது. இங்கே நான் கெஸ் பண்ண முடியாத பிரச்சனை இருந்தது. ஒரு சில நேரங்களில் நாம் யாருக்காவது பச்சரிசி சோற்றில் பருப்பு சாம்பார் பிசைந்து நெய் சேர்த்து டேஸ்ட்டான சாப்பாட்டை ஊட்டிவிட்டாலும் கூட நமது முகத்தில் துப்பி திட்டக்கூடிய ஆட்களுமே உலகத்தில் இருக்கிறார்கள். மனதுக்குள் வெறுப்பு வைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு நாம் நன்மையே செய்ய முயற்சி பண்ணினாலும் அதுவும் கெட்டதாகவே அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். விழுந்த குழியில் இருந்து தூக்கிவிட்டது நாம் என்றால் அந்த அவமானம் தாங்காமல் மறுபடியும் குழிக்குள்தான் சென்று விழுவார்கள். இதனால்தான் வார்த்தைகளை கொடுக்கும்போது கவனம் தேவைப்படுகிறது. நம்மை மனதார வெறுப்பவர்களுக்கு நம்மை இகழ்ந்து  பேசி இளக்காரம் பார்ப்பவர்களுக்கு நாம் எப்படியுமே எந்த நன்மையும் பண்ண முடியாமல் தோற்றுதான் போகிறோம். தேனில் விழுந்து மூழ்கும் தேளை காப்பாற்ற உள்ளங்கையை கொடுத்தாலும் விஷத்தோடு அந்த தேள் கொட்டிவிடும் என்பது போல மனசுக்குள் வெறுப்பாக இருப்பவர்களுக்கு நன்மை செய்யப்போகிறேன் என்று இன்னொருவருக்கு நான் கொடுத்த வாக்கை யோசித்து பாருங்கள். வாக்கு என்பது நம்முடைய சகதிக்குள் நம்முடைய செயல்களுக்குள் அடங்கிய ஒரு விஷயமாக இருந்தால் மட்டுமே கொடுக்க வேண்டும். இன்னொருவருடைய வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போகிறோம் என்று வாக்கு கொடுக்க கூடாது. இப்படியான வார்த்தைகள் பயனற்றது. இது போன்ற வார்த்தைகளை பெரும்பாலும் திரும்ப பெற வேண்டும் என்ற கட்டாயம் உருவாகும்.  மேற்படி என்ன சொல்லவருகிறேன் என்றால் வலைப்பூவில் வியூக்கள் குறைந்துகொண்டு இருக்கிறது அதனால் அனைத்து வலைப்பூ பதிவுகளையும் படித்து கமேண்ட்ஸை கொட்டுங்கள்.  



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...