Tuesday, December 12, 2023

GENERAL TALKS - இன்டெல்லிஜென்ஸை மட்டுமே வைத்து ஜெயித்து காட்டுவது


இங்கே நமது வாழ்க்கையை பற்றி நான் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறேன். ஆனால் என்னால் எப்படி வெற்றி அடைய முடிந்தது ? இங்கே இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் நமது வெற்றிக்கான ரகசியம் நம்மோடு இருக்கும் இன்டெல்லிஜேன்ஸ் மட்டும்தான் என்று நான் கண்டிப்பாக நம்புகிறேன். பிறக்கும்போதே நமது மனித இனத்தில் எல்லோருக்குமே இலவசமாக கிடைத்த சூப்பர்ரான விஷயம் நம்முடைய இன்டெல்லிஜென்ஸ் மட்டும்தான். கடவுள் மனிதனுடைய இந்த கொஞ்சமாக வாழும் வாழ்க்கையில் நிறைய நேரம் மனிதர்களிடம்  இருந்து எல்லாவற்றையுமே பறித்துக்கொண்டு பூமிக்கு பாரமான ஒரு வாழ்க்கையை வாழ கட்டாயப்படுத்துவார். இந்த மாதிரியான ஒரு விஷயத்துக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த காசு உங்களுக்கு அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகும்போது உங்களுடைய ஹாஸ்ப்பிட்டல் பில்லுக்கு மட்டுமே சரியாக போவதை பார்க்கும்போது உங்களுக்கு புரியும். நமது தலைவர் இப்போது எல்லாம் இப்படித்தான் பண்ணிக்கொண்டு இருக்கிறார். இங்கே நம்முடைய உலகத்தை மாசுபடுத்தி உயிரினங்களை எக்ஸ்ட்டின்க்ட்க்கு கொண்டு போகும் ஆட்களுக்கு ஆதரவு கொடுக்கிறார். ஆனால் அதே சமயத்தில இந்த உலகத்தில் இருக்கும் மரங்கள் , செடிகள் , பூச்சிகள் முதல் பறவைகள் , விலங்குகள் மற்றும் மனிதர்கள் வரைக்கும் எல்லோரையும் காப்பாற்ற போராடுபவர்களுக்கு கடினமாக எதிர்ப்பு கொடுத்து கல்லறையில் படுக்க வைக்க முயற்சி பண்ணுகிறார். இங்கே தலைவர் இத்தனை விஷயங்களை பண்ணுவதால் நல்ல விஷயங்களுக்கு போராடும் நமக்கு கடைசியில் எதுவுமே இல்லாமல் போய்விடும். நம்முடைய நினைவுகளில் இருக்கும் இண்டெலிஜன்ஸ் மட்டும்தான் நமக்கு ஆதரவு கொடுக்கும். இங்கே நிறைய விஷயங்களை வெறும் இண்டெலிஜன்ஸ் மட்டுமே வைத்து வெற்றி அடைந்து காட்டுவது என்பது ரொம்ப ரொம்ப கடினமான விஷயம் , இண்டெலிஜன்ஸ் வைத்து போராடினால் வாழ்க்கை மொத்தமுமே நமக்கு மரண வேதனை கொடுக்கும் இருந்தாலும் மேலே வந்தாக வேண்டும். கைகளில் எதுவுமே இல்லாமல் போதுமான திறனும் இல்லாமல் வெறும் இண்டெலிஜன்ஸ் மட்டுமே என்று நம்பிக்கையாக இந்த போர்க்களத்தில் குதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். இங்கே வெற்றி நமக்குதான் கிடைக்க வேண்டும். நாம்தான் வென்றாக வேண்டும். இந்த விஷயத்தை கற்றுக்கொள்ள எனக்கு பல வருடங்கள் தேவைப்பட்டது. இண்டெலிஜன்ஸ் மட்டுமே வைத்து வெற்றி அடைவது எனக்கு என்னுடைய வாழ்க்கையின் ஒரு நாள்தோறும் நடக்கும் வேலையாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக கடந்தகால பிரச்சனைகளை வெற்றி அடையவேண்டும் என்றால் இண்டெலிஜன்ஸ்தான் என்னுடைய பெஸ்ட் சாய்ஸ். நான் இண்டெலிஜன்ஸ்ஸை மட்டுமே வைத்து ஜெயித்து காட்டியுள்ளேன். இதனை நிறைய பேர் பண்ணவில்லை. ஆனால் நான் பண்ணினேன். எனக்கு வேறு ஆப்ஷன் இருந்ததே இல்லை. இது எல்லாமே என்னுடைய தனிப்பட்ட விஷயம்தான். பேசிக்காக நான் களத்தில் இறங்கினால் இந்த பிரச்சனைகளை சாதித்து காட்டுவது எனக்கு சுலபமான விஷயம். இருந்தாலும் பணம் காசு தேவை இல்லையா ? அதனால்தான் எப்படியாவது எல்லா போஸ்ட்களுக்கும் படித்து வியூஸ் கொடுத்துவிடுங்கள் !! 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...