Tuesday, December 12, 2023

GENERAL TALKS - இங்கே யூட்யூப் இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது !!



இங்கே நிறைய பேர் யூட்யூப் மாதிரியான பயனுள்ள இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது என்று புரியாமல் இருக்கிறார்கள். இங்கே நான் பெர்சனலாக ரெகமண்ட் பண்ணும் ஒரு சில விஷயங்களை நான் இங்கே பதிவு பண்ண விரும்புகிறேன். 


1. இன்டர்வியூக்கள், பாட்கேஸ்ட்கள் மற்றும் தகவல்கள் நிறைந்த பேச்சுகள் !!

பொதுவாக உங்களுடைய நேரத்தை பொழுதுபோக்கு என்பதை விடவும் நிறைய பயனுள்ள கருத்துக்களுக்கு மற்றும் வாழ்க்கையில் மற்றவர்களுடைய வாழ்க்கையை பற்றியும் தொழில் அனுபவங்கள் பற்றியும் தெரிந்துகொள்வதுக்கு நிறைய இன்டர்வியூக்கள் மற்றும் பேச்சுக்களை பார்க்க நீங்கள் யூட்யூப் இணையத்தை பயன்படுத்தலாம், இதுபோன்ற கன்ட்டென்ட்கள் உங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும். 

2. கணிதம் , அறிவியல் மற்றும் படிப்பு விஷயங்கள் !

இங்கே நீங்கள் பாடபுத்தகத்தில் பார்த்து புரியவில்லை என்று மண்டையை உடைத்துக்கொண்டு இருப்பதற்கு யூட்யூப் இணையதளத்தில் பார்த்தால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல ஐடியா கிடைக்கும். கிளாஸ்ஸை கண்டிப்பாக டைம் டிராவல் பண்ண முடியாது ஆனால் யூட்யூப் காணொளிகளை கண்டிப்பாக டைம் டிராவல் பண்ணலாம். இந்த மாதிரி விஷயகளில்தான் நிறைய பொழுதுபோக்கும் பணமும் கொட்டி கிடைக்கிறது. 

3. படம் பார்க்கலாம் ஆனால் விமர்சனம் பார்க்க கூடாது !!

இங்கே என்னுடைய வலைப்பூவே விமர்சனம் போடும் வலைப்பூதான் ஆனால் விமர்சனமும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதால் நான் விமர்சனங்களை எப்போதுமே பரிந்துரை பண்ணுவது கிடையாது. ஒரு படம் பார்த்தால் அந்த படத்தின் கதை நீங்கள் பார்த்த விஷயம்தான், இனிமேல் விமர்சனம் பண்ணினால் மட்டும் படத்தின் கதை மாறவா போகிறது ? ஒரு படம் பார்க்க வேண்டும் பாடல்கள் கேட்க வேண்டும் என்றால் கண்டிப்பாக யூட்யூப் நல்ல பிளாட்ஃபார்ம். 

4. சாப்பாடு விமர்சனங்கள் தர்மசங்கடமானது !!

பொதுவாக நான் சாப்பாடு விமர்சனங்களை கண்டிப்பாக வெறுக்கிறேன். நீங்கள் எங்கே வெளியே சாப்பிட்டாலும் இன்னொருவருக்கு பகிர முடியாமல் விமர்சனம் மட்டுமே பண்ணுவது தர்மசங்கடமானது. இருந்தாலும் சமையல் என்பது அடிப்படையாக எந்த ஒரு மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் கண்டிப்பாக சமையல் செய்முறை காணொளிகளை இந்த வகையில் குறைசொல்ல முடிவது இல்லை. 

5. கலை அதிகமானால் ஆபத்தானது :

கலை எப்போதுமே ரொம்பவுமே நல்ல விஷயம். கலையுடய முக்கியமான நோக்கம் பாராட்டு. உங்களிடம் நிறைய பணம் உள்ளது என்றால் பாராட்டுக்களை கொடுத்து கலையை ரசிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறது. ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்றால் கலைக்கு ரசனையை கொடுத்து வாழ்க்கையின் நேரத்தினை விட்டுக்கொடுத்துவிட கூடாது. நேரம் மறுபடியுமே கிடைக்காது. உங்கள் ரசனைக்கு யுட்யூப் பயன்படுத்துவதை விட உங்களுடைய மேம்பாட்டுக்கு இந்த தளத்தை பயன்படுத்துங்கள் !!

6. சாதனங்கள் பழுதா ? கவலை வேண்டாம் !!

உங்களுடைய கம்ப்யூட்டர் , ஃபோன் , பைக் , கார் , தொலைக்காட்சி மற்றும் மின்விசிறி என்று எந்த வகை பழுதாக இருந்தாலுமே சரிபண்ண வேண்டும் என்றால் இந்த இணையதளம் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கிறது. 

7. ரசிகர் மன்றம் அமைக்க வேண்டாம் , ரசனை மட்டுமே போதும். 

இந்த விஷயத்தை நான் சொல்வதை விட சமீபத்தில் ஒரு மனிதர் சொன்ன கருத்தை சொல்கிறேனே ? உங்களுடைய ஹீரோ எந்த வீட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் ? நீங்கள் எந்த வீட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் ! உங்கள் ஹீரோ என்ன கார் பயன்படுத்துகிறார் ? நீங்கள் என்ன கார் வைத்து இருக்கிறீர்கள். நடிப்பு என்பது ஒரு தொழில். பாராட்டு கொடுத்தலும் கொடுக்காமல் போனாலும் அவர்கள் எப்போதோ வெற்றி அடைந்துவிடுவார்கள் ஆனால் நீங்கள் எப்போது வெற்றி அடையப்போகிறீர்கள் ? கவனமாக யோசியுங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...