நம்ம வாழ்க்கையில் ஒரு சில வேலைகளை வேகமாக முடிப்பதுதான் சிறந்தது என்கிறோம் , அப்படி வேகமாக முடிப்பவர்களை மட்டும்தான் பாராட்டுகிறோம், மெதுவாக முடிப்பவர்களை முட்டாள் என்று கருதுகிறோம் !! ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் இங்கே ஒரு சில விஷயங்களில் மெதுவாக செயல்பட்டால்தான் வேலையை முடிக்க முடியும் , யாரவது வேகமாக செயல்பட்டு முடித்தால் அவர்கள் ஏமாற்று வேளைகளில் ஜெய்க்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு நல்ல எக்ஸாம்பிள் என்றால் ஹை - கிரேடு கணிதத்தை சொல்லலாம். இந்த வகை கணக்குகளை எல்லோருமே மனப்பாடம் பண்ணினால் 5 நிமிடத்தில் ஆன்ஸர் பேப்பர்ரில் எழுதிவிடலாம் ஆனால் மனப்பாடம் பண்ணாமல் புரிந்து படித்து அந்த ஆன்ஸர் பேப்பர்ரில் எழுதவேண்டும் என்றால் எக்ஸாம் முழுக்க கொடுக்கப்படும் 3:00 மணி நேரம் கூட பத்தாது. இப்படித்தான் நம்ம சமுதாயம் மிகவும் திறமை உள்ள ஸ்டூடண்ட்களை இழந்துவிடுகிறது. நம்ம சமுதாயம் மட்டமான மனப்பாடம் பண்ணும் ஆட்களை எல்லாம் உண்மையான அறிவாளிகளுக்கு மேலே சம்பளம் வாங்கும் பெரிய ஆட்களாக தகுதியில் உட்கார வைத்துவிடுகிறது. நம்ம வாழ்க்கை இப்படித்தான் மட்டமான முறையில் நடந்துகொள்கிறது. இந்த விஷயத்தை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இங்கே PI = 3.14 அல்லது LOG என்றால் என்னவென்று யாருமே புரிந்து படிக்க அனுமதிப்பது இல்லை. மனப்பாடம் பண்ணினால் போதும். மேத்தமேட்டிக்ஸ் புத்தகத்தை கரைத்து மிக்ஸியில் அரைத்து குடித்தது போல மனப்பாடம் பண்ணினால் போதும் என்று நம்ம ஆட்கள் முடிவு பண்ணிவிட்டால் பின்னால் கணிதம் சொல்லி கொடுப்பதே பயனற்ற விஷயமாக மாறிவிடும், நேர்மையாக நடப்பவனை ஞானப்பழமாகவும் , ஏமாற்றுபவனை தங்க நாணயமாகவும் பார்க்கும் இந்த பொய்யான இன்பத்தின் மயக்கம் நம்ம சமுதாயத்தையே ரொம்ப அசிங்கமான இடமாக மாற்றுகிறது. இது எல்லவற்றுக்குமே இன்னொரு பெரிய ஆபத்து பணம். இங்கே பணம் அதிகமாக ஏமாற்றி சம்பாதித்தவர்கள் கொஞ்சமாக சம்பாதிக்கும் மனிதர்களே என்னமோ அவர்களின் KGF ல் வேலை பார்க்கும் அடிமை போல நடத்துகிறார்கள். இந்த நிலைமையும் மாற்ற வேண்டும். (எல்லா பணக்காரர்களும் அப்படி இல்லை , ஒரு சில பணக்கார பையன்கள்தான் உயர் பிறப்பு என்று நிறைய அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ) . இதனால்தான் உங்களுக்கு ரொம்ப முக்கியமான விஷயத்தை சொல்லப்போகிறேன். பணத்தை எப்போதுமே இலவசமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுப்பது பணத்துக்கு மரியாதை கிடையாது. இந்த பணத்தை வைத்துக்கொண்டுதான் பணக்காரர்கள் ஒரு ஒரு நூறு ரூபாய்யையும் பத்தாயிரம் ரூபாய்யாக மாற்றுகிறார்கள். (ஒரு ஒரு சென்டையும் ஒரு முழு டாலராக மாற்றுகிறார்கள்) , இவர்கள் நம்ம சக்தியை குறைத்துவிட்டு பாதையை கடினப்படுத்தி இந்த வாழ்க்கையை கஷ்டமாக மாற்றுவதால் எல்லோருமே அவர்களுடைய சக்தியையும் மீறி போராடினால்தான் இவர்கள் வைத்து இருக்கும் அளவுக்கு வசதி வாய்ப்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்க முடியும் . இங்கே நீங்கள் மெதுவாக செயல்படுவதாக நினைக்க வேண்டாம் , மூன்று தலைமுறை சொத்து சேர்த்தவர்கள் ஃபாஸ்ட் இஞ்ஜின் காரில் வேகமாக தொலைவை கடந்துவிட்டு நாம் உயிரை கொடுத்து ஓடி வந்து தொலைவை கடந்தாலும் சேர்த்துக்கொள்ளாமல் ஸ்லோவாக கடந்ததாக குறை சொல்லுவார்கள். !!
No comments:
Post a Comment