இந்த உலகத்தில் எப்போதுமே அமைதியான நதியினிலே ஓடம் என்று வாழ்க்கையை அமைதியாக நகர்த்திவிட்டு செல்ல முடியாது , வாழ்க்கை என்றால் கெட்டவர்கள் இருப்பார்கள். அவர்களை எதிர்த்துக்கொண்டு ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் போராடவேண்டும். வேறு என்ன செய்வது. மனது என்றால் அப்படித்தான் வேலை பார்க்கும். இந்த படத்துடைய கதையும் அதுதான். நம்ம கதாநாயகர் மெடிக்கல் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது மோசமான அரசியல் காரணங்களால் தரமற்ற மருந்துகளால் ஒரு சிறுவன் காலமாகவே கதாநாயகரின் தோழி குற்ற உணர்வால் மனம் உடைந்து இறந்துவிடுவார். கதாநாயகர் தன்னுடைய தோழியின் மறைவுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் என்று மோசமான அரசியல் பண்ணுபவர்களை நேரடியாக எதிர்த்து போராடியதுதான் படத்தின் கதையாக இருக்கிறது. இந்த படம் வெளிவந்த 2002 ஆம் ஆண்டில் மிகப்பெரிய புரட்சிகரமான படமாக இருந்தது. ஒரு சினிமா வெறும் சினிமாவாக மட்டுமே இல்லாமல் சமூக பிரச்சனையை தட்டி கேட்டதால் எனக்கு இந்த படம் பேர்ஸனலாக ரொம்ப பிடிக்கும். இந்த படம் கண்டிப்பாக சினிமா வரலாற்றில் சிறந்த படம் என்றும் சொல்லலாம். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள்.
No comments:
Post a Comment