ஒரு பக்கம் சோஃபியா - செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செய்து காதலனை கரம்பிடிக்க செல்லும் ஒரு சிறப்பான புத்திசாலியான அறிவியல் ஆராய்ச்சிகளை செய்யும் ஒரு பெண் , இதுக்கு நேர் ஆப்போஸிட்டான ஒரு கேரக்டர்தான் வால்ட் - சுமாராக படிப்பு சென்றுகொண்டு இருந்தாலும் கையில் காசு கொஞ்சம் கூட இல்லை என்றாலும் எப்படியாவது செவ்வாய்கிரகத்துக்கு சென்று சாதனை படைக்க முடிவு பண்ணிய ஒரு பையன். ஒரு கட்டத்தில் சோஃபி செவ்வாய் கிரகம் செல்லவேண்டும் என்று முடிவு செய்து 80 கோடி செலவில் டிக்கெட் முன்பதிவு பண்ணி விண்வெளிக்கப்பலில் பயணத்தை தொடங்கும்போது இந்த விஷயத்தை சாதகமான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வால்ட் பொருட்களை அனுப்பும் வழியாக அந்த உயர்தர விண்வெளி கப்பலில் யாருக்குமே தெரியாமல் உள்ளே சென்றுவிடுகிறார். இப்போது வால்ட்க்கு தெரிந்த ஒரே தோழியாக இருக்கும் சோஃபியிடம் எப்படியாவது செவ்வாய் கிரகம் வரைக்கும் செல்லும் இந்த பயணத்தில் எனக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்று நிறைய உதவிகளை கேட்கவுமே சோஃபி இப்போது வால்ட்க்கு உதவி பண்ணுவதற்காக கஷ்டப்பட்டு ஒரு போலியான ஐடி கிரியேட் பண்ணி அந்த விண்வெளி கப்பலில் அவனையும் ஒரு பயணியாக மாற்றிவிடுகிறாள். இங்கே வால்ட்டை காப்பாற்ற சோஃபி பண்ணும் புத்திசாலித்தனம் நிறைந்த சாகசங்களும் க்ளைமாக்ஸில் இவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை ஒரு ஸ்பேஸ் சயின்ஸ் ஃபிக்ஷனாக படத்தில் சொல்லி இருக்கிறார்கள்.கதை நன்றாக இருக்கிறது. கேரக்டர் டிஸைன் சிறப்பு. கொஞ்சம் ரொமான்ஸ் இல்லாமல் க்ளைமாக்ஸ் வரைக்குமே நண்பர்களாக இவர்கள் இருவருமே பண்ணக்கூடிய அட்வென்சர்கள் எல்லாமே படமாக பார்க்கும்போது அருமையாக இருக்கிறது. மொத்தத்தில் சயின்ஸ் பிக்ஸன் படங்களை பார்க்கும் ஆடியன்ஸை டிஸப்பாய்ண்ட் பண்ணாத ஒரு ரொமான்டிக் ஸ்பேஸ் படம் இந்த
MOONSHOT !
No comments:
Post a Comment