Sunday, December 17, 2023

GENERAL TALKS - உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக வைத்து இருப்பது !!


நமது வாழ்க்கையில் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ரொம்பவுமே முக்கியமானது. நம்ம உடல் நன்றாக இருந்தால் நம்ம வாழ்க்கையில நிறைய சாதிக்க முடியும். உங்களுக்கு உடற்பயிற்சி பண்ண போதுமான நேரம் இல்லை என்றாலும் உங்களுடைய வாழ்க்கையில் சர்க்கரையை குறைத்துக்கொண்டு உடனடி துரித உணவுகள் மற்றும் கரையாத கொழுப்பு உணவுகளை மொத்தமான நீக்கிவிட்டால் உங்களுடைய வாழ்க்கை அடுத்து வரும் வருடத்தில் மாறிவிடும் என்பது ஒரு நடமுறை சாத்தியமான விஷயம், இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது டோபமைன் மட்டும் அல்லாமல் அனைத்து ஹார்மோன்கள் மற்றும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்வதும் ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் , இன்னும் சொல்லப்போனால் உங்களுடைய உடல் எப்படி செயல்படுகிறது ? செரிமானம் , இரத்த ஓட்டம் , மூச்சு , நரம்புகள் , உடல் இயக்கம் என்று எல்லாவற்றையுமே தெரிந்துகொள்வது இன்னும் பெரிய அட்வாண்டேஜ், உங்களுக்கு ஒரு திரைப்படம் பார்க்கும் அளவுக்கு நேரம் இருந்தால் உங்களுடைய உடல் எப்படி வேலை செய்கிறது, உடல்நலத்தை பராமரிப்பது எப்படி என்றும் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்றும் மிகவும் சரியாக தெரிந்துகொள்ளுங்கள் இங்கே என்ன விஷயம் ரொம்ப வருத்தமானது என்றால் பெரும்பாலான நேரங்களில் ஆல்கஹாலிஸம் நல்ல மனிதர்களை மட்டும்தான் பாதிக்கிறது. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். இப்படி இருப்பவர்கள் யாராவது பார்க்கும்போது பாவம் அவருக்கு வாழ்க்கையில் அவருக்கு என்ன கஷ்டமோ என்ன பிரச்சனையோ ? என்ற வார்த்தைதான் நம்முடைய மனதுக்குள் வருகிறது. இந்த மாதிரியான கெட்ட பழக்கங்கள் உடல்நலத்தை ஒரு நாளில் கெடுத்துவிடுகிறது மேலும் மன நலத்தை வருடக்கணக்காக பயன்படுத்தும் பட்சத்தில் கெடுத்துவிடுகிறது. இந்த மாதிரி வாழக்கூடிய வாழ்க்கை வாழ்க்கையே கிடையாது. ஒரே நாளை நூறு வருடம் மறுபடியும் மறுபடியும் வாழ்ந்துவிட்டு இதை ஒரு வாழ்க்கை என்று பெருமையாக சொல்லிக்கொள்ள வேண்டாம் என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. இந்த வாழ்க்கை உங்களுடைய சாதனைக்கான ஒரு களம். உங்களுடைய சாதனைதான் உங்களுடைய வாழ்க்கைக்கான பெர்ப்பொஸ் , இந்த சாதனையை கூட பண்ணவில்லை என்றால் உங்களுடைய வாழ்க்கையை வாழ்வதுக்கு ஒரு காரணமே இல்லை என்றுதான் அர்த்தம். இங்கேதான் நான் சொல்லக்கூடிய விஷயங்களை கவனமான மனதுடன் கேளுங்கள். வாழ்க்கையில் நல்லது கெட்டது என்று எதுவுமே கிடையாது. இந்த வாழ்க்கையில் பிளஸ் மற்றும் மைனஸ் என்பவைகள்தான் உள்ளது. நீங்கள் பிளஸ் செய்தால் உங்களுக்கு பிளஸ் கிடைக்கும். நீங்கள் மைனஸ் செய்தால் உங்களுக்கு மைனஸ் கிடைக்கும். இந்த வாழ்க்கை அவ்வளவு ஸிம்பில் ஆனது. இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். அடுத்த போஸ்ட் படிக்கவும், நெக்ஸ்ட் பேஜ் கிளிக் பண்ணுங்க !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...