வெள்ளி, 8 டிசம்பர், 2023

CINEMA TALKS - PURPLE HEARTS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

கதாநாயகன் எப்படியாவது இராணுவத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டால் கடன் கொடுத்தவர்களின் தொல்லையில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்று போராடுகிறார். போதை பொருட்களுக்காக பெற்ற கடனை இப்போது திருந்தி நல்லவனாக இருக்கும்போதும் கூட கட்ட முடியாமல் தவிக்கிறார், இன்னொரு பக்கம் கதாநாயகி டயாபட்டிஸ் நோயோடு போராடிக்கொண்டு அப்படியே ஒரு பிரபலமான பாடகியாக ஆகவேண்டும் என்ற கனவுக்காக வேலை செய்துகொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறாள். இங்கே எதிர்பாராமல் சந்தித்துக்கொள்ளும் இந்த இருவரும் திருமணம் செய்துகொண்டால் பாதுகாப்பு துறையில் வேலைக்கு கணவன் சேர்ந்துவிடுவதால் மனைவியாக மருந்து மாத்திரைகளை இன்சூரன்ஸ் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று திட்டம் போடுகின்றனர், திருமணமும் செய்துகொள்கின்றனர். அடுத்து என்ன நடக்கும் ? என்றுதான் படத்தின் கதை உள்ளது. சொல்லப்போனால் கொஞ்சமும் சம்மந்தமே இல்லாமல் வெறுப்பாக இருக்கும் இருவர் அவர்களுடைய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள திருமணம் செய்துகொண்டு திருமணத்தின் நிறைய நாட்கள் நடிப்பாக வாழ்வதை பார்க்கும்போது நம்ம வாழ்க்கை சாதாரணமானது இல்லை என்றும் பணம்தான் எல்லாமே என்றும் தெரிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக நான் எல்லா படங்களின் விமர்சனங்களிலும் சொல்வதுதான். நெகட்டிவ் பாயிண்ட் ஆஃப் வியூவில் ஒரு கதையை படமாக எடுப்பது ரொம்ப கடினமானது ஆனால் இந்த படத்தில் ஒரு ரொமான்ஸ் இல்லாத ரொமான்டிக் பிலிம் என்று ரொம்ப புதுமையாகவே எடுத்து இருப்பார்கள். கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம் இந்த PURPLE HEARTS 

கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...