Tuesday, December 19, 2023

CINEMA TALKS - SUBRAMANIYAPURAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


சுப்ரமணியபுரம் - வாழ்க்கையில் இலட்சியங்கள் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் சிறிய வயதில் இருந்து நெருக்கமாக பழக்கிக்கொண்டு இருக்கும் நண்பர்களின் கூட்டம் , இவர்களில் ஒருவருக்கு காதல் ஒரு பக்கம் சென்றுக்கொண்டு இருந்தாலும் ஒரு தவிர்க்க முடியாத இந்த படம் 2006 - 2007 காலகட்டத்தில் வெளிவந்த படம் ஆனால் இன்னைக்கு இந்த படத்தை பார்த்தாலும் கூட என்னமோ 2013 - 2014 காலகட்டத்தில் வெளிவந்த படத்தை போல இருக்கும் , அப்படி ஒரு தரமான காமிரா வொர்க் இந்த படத்தில் நீங்கள் பார்க்கலாம். நடிப்பு என்றால் சசிகுமார் , சமுத்திரக்கனி , ஜெய் , ஸ்வாதி , கருப்பு , எல்லோருமே அவர்களுடைய கதாப்பத்திரமாகவே மாறி நடித்து இருப்பார்கள். ஒரு கட்டாயத்தால் கொலை பண்ணிய நண்பர்கள் எப்படி அடுத்தடுத்து பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு உயிரை பணயம் வைத்து நகர்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை - 1980 களில் நடப்பது போல காட்டப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு காட்சியிலும் பேக்ரவுன்ட் வொர்க்ஸ் எல்லாமே அவ்வளவு சிறப்பாக 85 களின் கடந்த காலத்தின் மதுரை மாநகரத்துக்கே அழைத்து சென்றுவிடும். ஒரு ஒரு சின்ன சின்ன காட்சியிலும் வீடியோ எடிட்டிங் மிகவுமே தரமானதாக இருக்கும். இந்த படம் டிஜிட்டல் காமிராவில் எடுக்கப்பட்ட படம் என்பது கணிப்புதான். ஆனால் காமிரா சாய்ஸ் படத்துக்கு ஃபேன்ட்டாஸ்டிக்காக இருக்கிறது. ஒரு ஃப்யுர் க்ரைம் படம். கண்டிப்பாக பாருங்கள் !!

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...