Wednesday, December 6, 2023

GENERAL TALKS - RANDOM TAMIL - ஐடியா இல்லாத பசங்க !!

 பிரஷர் குக்கர்ல அரிசியை போடாமல் வெறும் தண்ணீரை கொதிக்க வைத்துவிட்டு இந்த குக்கர் எனக்கு சோறு போட தகுதியற்றது என்று சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒரு இடத்துக்கு தேவையான விஷயம் அது பணமாக இருக்கலாம் , பொருளாக இருக்கலாம் வேறு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் அந்த இடத்துக்கு அந்த பெர்ஸனுக்கு அது தேவையான விஷயம் அது கிடைக்கவில்லை என்றால் அவன் கஷ்டப்படுவான் அல்லது அந்த இடம் முன்னேறாமல் இருக்கும் என்று தெரிந்தும் தொடர்ந்து அவனை கஷ்டப்படுத்துவது அல்லது அந்த இடத்தை மட்டமான இடமாகவே வைத்து இருப்பது பிரயோஜனமான மூடத்தனமான செயல். இந்த உலகத்திலேயே நம்ம ஆட்கள் மட்டும்தான் இந்த மாதிரி முடிவு எடுப்பதில் ரொம்ப கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இடது கையில் அடிபட்டால் மருந்து போடுங்கள் என்று சொல்ல கூடாது. அப்படி சொன்னால் நாம் சொல்லி செய்ய வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக வலது கைக்கு மருந்து போடுவார்கள். இங்கே அடுத்தவர்களை மாற்றவே முடியாது. தான் செய்யும் எல்லா விஷயங்களுமே சரியானது என்று எண்ணம் வைத்து இவர்கள் செயல்படுவார்கள். அந்த நேரத்துக்கு அது சரியானதாக இருந்தாலும் அடுத்த இருபது வருடம் போனாலும் போர்ஷன்களை அப்டேட் பண்ணாமல் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதைத்தான் பண்ணுவார்கள். பாம்புகளை பற்றி கவலைப்படாமல் எச்சரிக்கை கொடுத்தாலும் உதாசீனம் செய்து நம்மை தாழ்வாக பேசிவிட்டு (திட்டிவிட்டு) பின்னால் பாம்புகளின் வாய்க்குள் சந்தோஷமாக சமாதி அடைவார்களே தவிர்த்து காப்பாற்ற கொடுத்த கைகளை தேள் கொடுக்குகளாக கொத்திக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் ரொம்ப ஆபத்தான ஆட்கள். இவர்களை நம்ப முடியாது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...