Tuesday, December 19, 2023

GENERAL TALKS - கடந்த காலம் எவ்வளவோ நன்றாக இருந்தது !!

 



2023 - என்ற இந்த வருடம் கடந்த காலத்தை ரொம்பவுமே அன்டர்ரேட்டிங் பண்ணுகிறது. இதுக்கு எந்த காரணமுமே இல்லை என்று நினைக்கலாம் ஆனால் நிறைய காரணங்கள் இருக்கிறது. இங்கே என்னுடைய கணிப்பு அடிப்படையில் பார்த்தால் டெக் உலகம்தான் ரொம்ப ரொம்ப கடந்த காலத்தின் மதிப்புகளை விட்டுவிட்டு தரைமட்டத்துக்கு சென்றுகொண்டு இருக்கிறது. பொதுவாக அன்டர்ரேட்டிங் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன ? ஒரு விஷயம் சிறப்பாகவே இருந்தாலும் அந்த விஷயத்தை சிறப்பு என்று சொல்ல மாட்டார்கள். அந்த விஷயத்துக்கு உண்மையாகவே நிறைய மதிப்பு இருந்தாலும் அந்த மதிப்பை கொடுக்க மாட்டார்கள். இப்படி எல்லாம் பண்ணினால் அதுதான் அன்டர்ரேட்டிங். இதுக்கு ஒரு சரியான எக்ஸாம்பில் சொல்லவேண்டும் என்றால் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சொல்லலாம். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் நல்ல வேகத்துடனும் சிறப்பான செயல்திறனுடனும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் யூஸர் இன்டர்ஃபேஸ் மிகவும் புரட்சிகரமாக இருந்தது. காலத்துக்கு ஏற்ற மாற்றமும் முன்னேற்றமும் இந்த சாஃப்ட்வேர்ரில் இருந்தது ஆனால் நடந்தது என்ன ? மக்கள் விண்டோஸ் 7 ஐ மட்டுமே கடைசி வரை நம்பினார்கள். விண்டோஸ் 8 கொடுத்த அனைத்து முன்னேற்றமும் வேஸ்ட் என்னும் வகைக்கு அன்டர்ரேட்டிங் பண்ணுகிறார்கள். இன்றைக்கு AI இருக்கிறது. இங்கே 2013 - 2014 ல் எல்லாம் AI என்பதே ரொம்பவுமே வளர்ச்சி அடையாத டிப்பார்ட்மெண்ட் ஆனால் இப்போது எல்லாம் AI இல்லாமல் இணையதளத்தில் பாதி வேலையே நடக்காது என்ற அளவுக்கு AI நிறைய வேலைகளை காட்டிவிட்டது. இதுக்கு காரணம் கொரோனா என்றால் கண்டிப்பாக உண்மைதான். கணிப்பொறி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையை தவிர்த்து வேறு எந்த துறையும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. மேலும் வாங்கிய கடன்களை அடைக்க வேண்டும் என்றால் ஒரு சாதனையை பண்ணியே ஆகவேண்டும். இந்த சாதனை கணக்கு இல்லாத அளவுக்கு மேலே உயரத்துக்கு போவதாக இருக்க வேண்டும். அதுக்காகத்தான் AI பயன்படுகிறது. அப்லோட் வேகம் பல மடங்குக்கு அதிகமாக இருப்பதாலும் AI வெளியீடு போட்டோ , வீடியோ , இசை போன்ற கோப்புகளை பல மடங்கு அதிகமாக தயாரிக்க வைத்த காரணத்தாலும் விஷயம் ரொம்ப பயங்கரமாக சென்றுவிட்டது. இங்கே AI வைத்து தனி மனிதன் எதுவுமே சாதிக்க முடியாது. ஆனால் பல வருடங்களாக வியாபாரத்தில் இருக்கும் பெருநிறுவனங்கள் நிறையவே சம்பாதிக்கலாம். இவர்களால் நிறைய சாதிக்க முடிய காரணம் சிறப்பான முறையில் அடுத்தடுத்த செயல்களை பண்ணி கம்பெனிக்கு இலாபத்தை அதிகரித்து முறையாக எதிர்காலத்தை திட்டமிடும் ஆட்கள் இவர்களுக்கு வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள் என்பதால்தான். இது எல்லாமே சேர்த்து வைத்து பார்க்கும்போது AI இல்லாமல் அல்லது CRYPTO இல்லாமல் இருந்த கடந்த காலம் எவ்வளவோ நன்றாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கையின் இந்த தடுக்க முடியாத மாற்றத்தை எடுத்துக்கொள்வோம் நமக்கு வேறு பாதை இல்லை. இந்த பாதைகளில் இனிமேல் AI ஒரு கோஸ்ட் போல பின்தொடருவதை நம்மால் மறுக்க முடியாது !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...