இந்த படம் பற்றி சொல்லவேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த படம் ஒரு வேற லெவல் படம், வெளிவந்த பாயிண்ட் ஆஃப் வியூவான 2010 வருடத்தில் எல்லாம் மார்வேல் சினிமாட்டிக் யுனிவேர்ஸ் என்பதே கிடையாது. சூப்பர் ஹீரோ அல்லது சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் ரொம்ப குறைவுதான் ஆனால் இந்த படம் சுஜாதா ரங்கராஜன் அவர்களால் எழுதப்பட்ட ஷங்கர் அவர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு தரமான படைப்பு. அறிவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் வசீகரன் பல வருட ஆராய்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கிய ஆன்ட்ராய்ட் ரோபோட்தான் சிட்டி , தனக்கு தெரிந்த தகவல்களை பொறுத்து அறிவுப்பூர்வமாக செயல்படும் இந்த இயந்திரம் எந்த உணர்வுகளுமே இல்லாத ஒரு படைப்பாக இருப்பதால் இந்த இயந்திரத்துக்கு இராணுவ பயன்பாடு இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக உயிரையும் உணர்வுகளையும் கொடுத்துவிடுகிறார். ஆனால் அந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் காதலித்த பெண்ணை இப்போது இந்த இயந்திரமும் காதலிப்பதால் ஆராய்ச்சியாளரால் இந்த இயந்திரம் உடைக்கப்படவே தப்பானவர்களின் கைகளில் சேர்ந்து கொடூர கொலைகார ரோபோட்டாக அப்கிரேடு செய்யப்படுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்று ரொம்ப சிறப்பான திருப்பங்களுடன் செல்லும் ஒரு படம்தான் இந்த எந்திரன் , இந்த படத்தின் கிளைமாக்ஸ்ஸில் ஒரு நல்ல மேசேஜ் இருக்கிறது.
இந்த படத்துக்கு அடுத்த பாகம் 2.0 இந்த படத்தில் பிரச்சனை என்னவென்றால் சுஜாதா அவர்களின் எழுத்து மிஸ் ஆவதால் சென்ற படத்தின் கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் மிஸ்ஸிங் ! ஆனால், கதை ரொம்ப தரமான கதை. நடிப்பு திறன்கள் ரொம்ப பிரமாதம், ஃபோன் ஆன்டேனா பயன்பாட்டால் பறவைகள் பாதிக்கப்படுவதால் இந்த விஷயத்தை தடுக்க பறவை ஆராய்ச்சியாளர் பட்சிராஜன் நிறையவே போராடினாலும் அரசியல் சதிகளால் தோற்கடிக்கப்படுகிறார். இப்போது அவருடைய இறப்புக்கு பின்னால் அவருடைய ஆன்மா மொத்தமாக இருக்கும் எல்லா மக்களையும் கொல்ல துணியும்பொது 2.0 என்ற தடைசெய்யப்பட்ட ப்ரோக்ராமை கொடுத்து மறுபடியும் அந்த கொடிய வில்லனை களம் இறக்குவதுதான் இந்த படத்தின் கதை , படம் பார்ட்ஸ்ஸாக வொர்க் அவுட் ஆகிறது. சோர்ஸ் மேட்டிரியல்க்கு இம்ப்ரூவ்மேன்ட் கான்ஸ்ஸெப்ட்களுக்கு இன்னும் இம்போர்ட்டன்ட் கொடுத்து இருக்கலாம். ப்ரொடக்ஷன் வேல்யூ பிரமாதம் என்றாலும் ஸ்கிரீன் ப்ரேஸென்டேஷனில் இன்னும் நிறைய இந்த படத்தில் இம்ப்ரூவ்மெண்ட் பண்ண வேண்டும். கதை என்ற அடிப்படையில் மற்றும் நடிப்பு என்ற அடிப்படையில் இந்த படம் தரமான அவுட் ஆஃப் பாக்ஸ் கிரியேஷன் என்பதை மறுக்க முடியாது.
No comments:
Post a Comment