Wednesday, December 13, 2023

CINEMA TALKS - NINETY SIX - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



 பொழுது போக்கு விஷயத்தை கொடுப்பது மட்டுமே சினிமா இல்லை. சினிமா என்பது நம்முடைய வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்று நிறைய பேர் சொல்லி நாம் கேட்டு இருக்கலாம். இந்த வாக்கியத்துக்கு ஒரு பெஸ்ட் பிலிம்தான் இந்த 1996. சொல்லப்போனால் இந்த படத்தில் கிளைமாக்ஸ்ஸில் வரும் காட்சிகள் எல்லோருடைய மனதிலும் எப்போது வந்துபோன ஒரு சின்ன காதல் கதையை தூசு தட்டி எடுத்துவிடும், இந்த படம் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா என்ற இரண்டு பேருடைய வாழ்க்கையிலும் அவர்களுடைய திரைப்பட பணியில்  கேரியர் பெஸ்ட் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். ரொம்ப கியூட்டான லவ் ஸ்டோரி. கொஞ்சம் ஹியூமர் இருந்தாலும் அது கதைக்கு எந்த ஒரு மாற்றத்தையுமே கொண்டுவரவே இல்லை. இந்த படம் ஒரு சகாப்தம் நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் நம்ம வலைப்பூவில் எப்போதுமே சுருக்கமாக ஒரு சின்ன கருத்து பதிவு மட்டும்தான் போடுகிறோம் என்பதால் இந்த படத்தை இப்படி சொல்லலாம். ஒரு புரஃபஷனல் போட்டோக்ராபி காமிராவில் ரொம்ப அரிதாக ஒரு ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இல்லாமல் ஒரு கான்டிட் போட்டோ கிடைக்கும் ஆனால் அந்த போட்டோவில் இருக்கும் மாயாஜாலம் அந்த மோமென்ட் மறுபடியுமே கிடைக்காது. உங்களுக்கு தமிழ் சினிமா பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இந்த 1996 - என்ற திரைப்படம் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...