இங்கே தனித்து இருந்தால்தான் மனது என்றும் மனதுக்குள் எப்போதுமே மாற்றங்களை பண்ண கூடாது என்றும் ஒரு கருத்து இருக்கிறது. நம்முடைய மனது எப்போதுமே ORIGINAL - ஆக இருக்க வேண்டும். இன்னொரு மனதால் மாற்றத்தை உருவாக்கி நம்முடைய மனது மாறிவிட கூடாது என்று நினைக்கிறோம். இங்கே இது குழந்தைகளுக்கு சரியானதாக இருக்கலாம் ஆனால் மெச்சூரிட்டியாந உண்மையான வாழ்க்கையில் பிரியாமல் வாழவேண்டும் என்றபோது இருவருமே தன்னோடு இணைந்து இருப்பவர்களின் உடல்நலத்திலும் , மனநலத்திலும் , உலகத்தில் இந்த இரண்டு பேருடைய இடம் என்ன என்பதிலும் கண்டிப்பாக பொறுப்பு எடுத்துக்கொண்டு ஒரு சாதனையை செய்தே ஆகவேண்டும். எப்போதுமே இரு மாறுபட்ட மனங்கள் சேர்ந்து அவைகளுடைய கருத்துக்கள் மோதிக்கொள்ளும்போது கண்டிப்பாக கேமிஸ்ட்ரி விளைவை போல நிறைய மாற்றங்களை அடைந்து ORIGINAL - ஸ்டேட்டில் இருந்து RESULT- ஸ்டேட்க்கு மாறித்தான் ஆகவேண்டும். உங்களுடய மனது எப்படிப்பட்ட விஷயமாகவும் இருக்கலாம். ஆனால் உங்களுடைய வயது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக்கும்போது உங்களுடைய மனதும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை அடைந்துகொண்டுதான் இருக்கிறது. நீங்கள் இதுதான் உண்மை என்றும் இதுதான் ஒரு அசலான விஷயம் என்றும் கற்பனைகளை பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். உண்மையில் ஒரு உண்மைக்கு கோடிக்கும் மேல் நகல்கள் இருக்கும் அவைகளில் ஒரு சில நகல்கள் அசலுக்கும் மேலே செயல்பட்டு அடுத்த அசலாக மாறிவிடுவதால் போனமுறை அசலாக இருந்த விஷயத்தை போலியாக மாற்றிவிடும். இங்கே உறவு முறைகளில் நம்ம ஊருக்கு மேலை நாட்டு கலாச்சாரம் சரிபட்டு வராது. ஒருவருக்கு ஒருவர் மிகவும் வெளிப்படையாக பழகுவதால் திருமணத்துக்கு பின்னாலும் தனித்த இரண்டு தீவுகளுக்கு இடையில் போடப்பட்ட பாலமாகத்தான் இருக்கும். மேலை நாட்டு கலாச்சாரம் என்றால் பள்ளி படிப்பில் இருந்தே திருமணம் என்ற விஷயத்துக்காக இருக்கும் மேச்சூரிட்டி மேலை நாட்டு மக்களிடம் இருக்கிறது ஆனால் நமது கலாச்சாரத்தில் ஒரு அன்கண்டிஷன்னல் அன்பு மக்களிடம் இருக்கிறது. இந்த அன்பு நம்முடைய உறவுகளை நலமாக வாழவைக்க வேண்டும் என்ற வகையில் ஃபோகஸ் பண்ணப்பட்டு இருக்கிறது. நலம் மட்டும்தான் நம்ம கலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முதன்மையான விஷயமாக சொல்கிறது. பைனான்ஸ் அடிப்படையில் ஸ்டேட்டஸ் முன்னேற்றம் கூட இரண்டாம் வகை கருத்துதான். மேலை நாட்டு கலாச்சாரம் இந்த நாட்டில் இப்போது நல்ல அன்பாக வாழ்ந்துகொண்டு இருப்பவர்களை கூட பிரித்துவிடுகிறது. உண்மையான நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத ஒரு அன்கண்டிஷனல் காதல் கற்பனையில் மட்டுமே சாத்தியமான ஒரு விஷயம். கணக்கை இல்லாமல் செலவு பண்ண பணம் இருந்தால் நிஜ வாழ்க்கையில் சாத்தியப்படலாம் ஆனால் நிலைக்காது. வாழ்க்கை என்னைக்குமே மாற்றங்களுக்கு உட்பட்டது. இப்படி இரண்டு மனங்கள் இணையும்போது வாழ்க்கையில் சாதனைகள் பண்ணவேண்டும் என்றால் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களையும் இனிமேல் நடக்கப்போக்கும் மாற்றங்களையும் கண்டிப்பாக ACCEPT பண்ணுங்கள் ! உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அடுத்த கட்ட சாதனையை உங்களால் கண்டிப்பாக பண்ணவே முடியாது. ஒரு புத்தகத்தில் ஒரு சாப்ட்டர் படித்துவிட்டால் அந்த சாப்ட்டர் உங்களுக்கு போதுமான மனநிறைவை கொடுத்துவிட்டால் அந்த ஒரு சாப்டர் போதும் அதுவே வாழ்க்கைக்கு என்று ஒரு மட்டமான கருத்தை உங்களுக்குள் விதைத்துக்கொள்ள வேண்டாம். கிளைமாக்ஸ் உங்களுக்கு பிடிக்குமோ அல்லது பிடிக்காதோ நீங்கள் அந்த கிளைமாக்ஸ்ஸை ACCEPT பண்ணித்தான் ஆகவேண்டும் அப்போதுதான் வாழ்க்கையில் ஒரு முழுமை கிடைக்கும். இந்த COMPLETE பண்ணும் செயல்தான் LIFE என்ற இந்த VIDEOGAME க்கு நீங்கள் கொடுக்க வேண்டிய CONCLUSION.
No comments:
Post a Comment