Sunday, December 31, 2023

GENERAL TALKS - WHY ANDROID PHONES BETTER - TAMIL - WHY ANDROID BETTER !!

 


 சாத்துக்குடி எப்போதுமே ரொம்ப மோசமான எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் கம்பெனி காரன். பணக்காரங்க எல்லோருமே வைத்து இருக்காங்க நானும் வைத்து இருக்கிறேன் என்று பெருமையா சொல்லிக்கொள்வேன் என்றால் ஒரு சாம்பில் சொல்கிறேன். பொதுவா நீங்கள் கால் பேசும்போது SMS வந்தால் டீங்.. டீங்.. அப்படினு சத்தமாக உங்க காதுக்குள்ளே கத்துவது போல மெசேஜ் டொன் அடிக்கும் இந்த செட்டிங் கூட உங்களால் சங்கே . இன்னொன்னு நம்பர் டைப் பண்ணனும். பெயரை டைப் பண்ணுனா நம்பர் வராது. நிறைய ஆப்ஸ் நிறைய கேம்ஸ் கண்டிப்பா சப்போர்ட் பண்ணாது. நம்ம சாத்துக்குடி ஒரு GB க்கு மேல RAM எடுக்கும் விளையாட்டுகளை அதுவே டெலீட் பண்ணிடும். பின்ன ! நடக்கற மெஷின்ல ஓடர ஒருவருக்கு பிளே கிரவுண்ட்ல களம் இறக்கினால் எப்படித்தான் இருக்கும் ? டிஸ்ப்லே கொதிக்கும். கால்குலெட்டர் ஆப் பார்த்தால் கண்டிப்பாக பயங்கர மட்டமான பழைய டிசைன். டாப்லேட்களில் கால்குலேட்டர் கிடையாது. புதுவகை டிசைன்ல ஒரு முடியை கூட பிடுங்கி இருக்க மாட்டார்கள். டிஸ்ப்ளே மரண மட்டமாக கொடுப்பார்கள். இருந்தாலும் நாங்கள் சாத்துக்குடி எக்கோ சிஸ்டம்தான் வைத்து இருக்கிறோம் என்று பெரிய பணக்கார இளைஞர்கள் சொன்னாலும் அடிப்படையில் அவர்கள் ஃபோன்னை பயன்படுத்தவே அவசியம் இல்லாதவர்கள். ஒரு ஸ்பேர் பார்ட் வாங்கணும் என்றால் உங்களுடைய பைக் அடமானம் வைக்க வேண்டும். புது ஃபோன் வாங்கவேண்டும் என்றால் உங்கள் வீட்டு பத்திரத்தை விற்க தயாராக இருங்கள். ரொம்ப மோசமான கஸ்ட்டமர் சர்வீஸ். இருந்தாலும் எல்லோருமே அமெரிக்கன் பிளாஸ்டிக் சைக்கிள் வாங்கும்போது நாம் தரமான உறுதியான ஸ்டீல் சைக்கிள் வாங்கினால் லூசுத்தனமாக பணக்காரர்கள் கலாய்ப்பார்கள். இங்கே இதுதான் நடக்கும். ஒரு குறிப்பிட்ட செட்டிங்ஸ் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் சாகவேண்டும். ஃபோன் சூடானால் முட்டை வாங்கி ஆம்லெட் போட்டுவிடலாம் அவ்வளவு சூடாக இருக்கும். சார்ஜர் செட் ஆகாது. சாத்துக்குடி வோர்ஸ்ட் யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுப்பதில் கைதேர்ந்தவன். பொருட்கள் நன்றாக அடுக்கப்படாமல் என்னுடய பெர்ஸனல் அறை இருப்பது போல ஆன்ட்ராய்ட் இருக்கிறது ஆனால் என். ஃபோன். நன்றாக இருக்கும் என்று அந்த பக்கம் சென்றால் நிறைய பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே இருக்கும் ஒரு சிறையில் அடைத்தது போல இருக்கும். ஃபோன் காஸ்ட்லி என்பதால் பவர் பாங்க் கொண்டு போக வேண்டும். விசேஷ வீடுகளில் சார்ஜ் போட்டால் காஸ்ட்லி ஃபோன் என்பதால்  நாய் போல காவல் காக்க வேண்டும். கீபோர்ட் கேவலமாக இருக்கும். கலர் இல்லாத செத்துப்போன சாம்பல் கீபோர்ட்தான் சாத்துக்குடி கொடுப்பான். இவ்வளவு ஏன் ? திரையில் இருக்கும் ஆப்ஸ் பொசிஷன் கூட உங்களால் மாற்ற முடியாது. கேமரா சென்ஸ்ஸார் கேவலம். SONY IMX கொடுப்பேன் என்று சொல்வான். ஆனால் எத்தனை வருஷம் ஆனாலும் கொடுக்க மாட்டான். CLIP BOARD இல்லை. COPY PASTE எல்லாம் பண்ணவே முடியாது !! இந்த மாதிரி நிறைய கொடுமைகளை அனுபவிக்க ஆரஞ்சு ஃபோன் வாங்கி சாத்துக்குடி ப்ராடக்ட் ரசிகர் மன்றத்தில் சேருவதை விட்டுவிட்டு தயவுசெய்து ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்குங்கள் !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...