Wednesday, December 13, 2023

GENERAL TALKS - பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜமப்பா !!

 


இப்போது கிரேயடிவிட்டியில் என்ன பிரச்சனை :

இந்த பிரச்சனையை மென்ஷன் பண்ண நான் ஒரு நிஜ லைப் எக்ஸாம்பில் சொல்கிறேன். "ஹலோ.. என்னுடைய பெயர் திலீப் குமார் !" - பொதுவாக திலீப் குமார் என்று யார் பெயர் வைத்து இருந்தாலும் இப்படித்தான் இன்ட்ரோடக்ஷன் கொடுப்பார்கள். இப்போது AI மூலமாக இந்த வார்த்தைகளை எழுதி யாராவது காப்புரிமை வாங்கிவிட்டால் , இனிமேல் "திலீப் குமார்" என்று ஒரு பெயர் இருப்பவர் "ஹலோ.. என்னுடைய பெயர் திலீப் குமார் ! என்ற வார்த்தைகளை பயன்படுத்த முடியாது , இந்த வாக்கியத்தை பயன்படுத்தினால் காப்புரிமை மீறல் என்று ஆகிவிடும் அல்லவா ? அதனாலே "வணக்கம்பா ! வாட்ஸ் அப் ? என்ன பத்தி சொல்லியே ஆகணும் எனக்கு தெரிஞ்சவங்க எல்லோருமே என்னை திலீப் குமார் அப்படின்னு கூப்பிடுவாங்க ! " என்று புதிதாக எழுதவேண்டும் என்ற கட்டாயம் உருவாகும். இப்போது அடிப்படையில் ஒரு விஷயம் காப்புரிமை மீறல் என்று சொல்லப்படுகிறதா என்று ஒரு ஒரு வார்த்தைக்கும் யோசித்து யோசித்து பேசினால் இது எப்படி சுதந்திரமாக பேசுவது என்பதாகும் ! பேசுவது என்பது ஒரு விளையாட்டு இல்லை, பேசுவதற்க்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்று நிறைய விஷயங்கள் எல்லாமே இருக்க கூடாது ! இங்கே AI வந்ததில் இருந்து டெக்ஸ்ட் என்று எழுதப்பட்ட அனைத்து விஷயங்களிலும் AI நன்றாக கலப்படம் பண்ணிவிடுகிறது. கடைசியில் மனிதர்கள்தான் போதுமான அளவுக்கு மேலே போராடினாலும் தோற்றுப்போனவர்களாக வெளியேறுகிறார்கள். இங்கே ஒரு சில விஷயங்களை மனிதர்கள்தான் பண்ண வேண்டும், இதுபோன்ற AI க்கள் எல்லா மியூசிக்கையும் காப்புரிமை வாங்கிவிட்டால் நம்ம மனித வாழ்க்கை என்ன ஆவது ? மியூசிக்கை கேட்க காது வேண்டும். அந்த காது மனிதனிடம்தான் இருக்கிறது. இந்த வலைப்பூ போல சினிமா விமர்சனம் பண்ணுவது எல்லாம் AI க்கு சும்மா ஒரு தூசு ! இங்கே தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறார்கள். இல்லை என்றால் AI என்பது நிறைய வலைப்பூக்களை உருவாக்கி காசு காசாக அள்ளிவிடும். இங்கே AI நமது மனித இனத்துக்கு எப்போதுமே ஆபத்துதான் ! இதையும் மீறி பொதுவாழ்க்கையில் இது எல்லாம் சகஜம்மப்பா என்று சொல்லிக்கொண்டு இருந்தால் முதல் ஆப்பு நமக்குதான் என்பதை இந்த உலகம் புரிந்துகொண்டால் நல்லது !  இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த படம் போலவே நிறைய படங்களுக்கு என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை படித்து மகிழவும்.  இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். அடுத்த போஸ்ட் படிக்கவும், நெக்ஸ்ட் பேஜ் கிளிக் பண்ணுங்க !!



No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...