Saturday, December 23, 2023

CINEMA TALKS - VIRUMANDI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

இந்த படம் ஒரு வேற லெவல் படம். நிறைய காரணங்களுக்காக குற்றம் சுமத்தப்பட்டு விருமாண்டி என்ற கிராமத்து மனிதர் கேபிட்டல் பனிஷ்மெண்ட் கொடுக்கப்பட்டு மரண தண்டனைக்காக காத்து இருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் நடந்தது என்ன ? எப்படி அவருடைய வாழ்க்கையில் ஒரு சில மோசமான எண்ணங்களை உடைய சொந்தக்காரர்களால் மிகப்பெரிய பாதிப்பை அடைக்கிறார் என்பதை நான் லீனியர் நேரேஷன்னில் இரண்டு தனித்தனி கதாப்பாத்திரங்களின் பாயிண்ட் ஆஃப் வியூவில் சொல்லும்போது படம் வேற லெவல்லில் இருக்கிறது. இப்படி ஒரு இண்டரெஸ்ட்டிங்கான படம் 2004 ல் நம்ம தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளது. உங்களுக்கு சினிமா பிடிக்கும் என்றால் பார்த்து கொண்டாட வேண்டிய படம் இந்த படம். கமல் ஹாசன் உண்மையில் மிகப்பெரிய கிரியேட்டிவ் திறன்கள் நிறைந்த ஸ்மார்ட்டான ஆக்டர் என்று இந்த படத்தில் நிரூபித்து காட்டியிருப்பார். விசுவல்லாக அவ்வளவு தரமான ப்ரொடக்ஷன் வேல்யூ. இந்த படத்தில் காமிரா வொர்க் மற்றும் எடிட்டிங் அவ்வளவு பிரமாதமாக இருக்கிறது.  பிரிவினை கருத்துக்களால் மக்கள் எப்படி ஒரு பாவமும் செய்யாத நல்லவர்களை கூட பாதிப்பை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று இந்த படத்தில் மிகவும் அழுத்தம் திருத்தமான கருத்துக்களை பதிவு பண்ணி இருக்கிறார்கள். ஸாங்க்ஸ் , லொகேஷன்ஸ் , கேரக்ட்டர் டிசைன்ஸ் அருமையாக இருக்கிறது. காஸ்ட்யூம் டிசைன்ஸ் பிரமாதம். அதுவுமே கிளைமாக்ஸ்ஸில் நடக்கும் ஜெயில் கலவர காட்சிகள் வேற லெவல்லில் இருந்தது அப்படி ஒரு மாஸ்ஸான கிளைமாக்ஸ் காட்சி. இந்த சமுதாயத்தில் எல்லோருமே வன்முறையை தேர்ந்தெடுப்பது இல்லை என்றும் காலம்தான் மக்களை கட்டாயப்படுத்துகிறது என்றும் இந்த படம் ரொம்ப சரியான கருத்துக்களை சொல்ல முயற்சி பண்ணி இருப்பது ரொம்பவுமே பாராட்டக்கூடிய விஷயம். ஒரு சில படங்கள் மட்டும்தான் தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு ஸ்டாண்டர்ட் மற்றும் ஒரு டிரெண்ட் ஸெட் பண்ணி கொடுக்கும் அப்படிப்பட்ட படம்தான் இந்த விருமாண்டி. பசுபதி , கமல் , மற்றும் நெப்போலியன் அவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு கண்டிப்பாக நிறைய விருதுகளும்  கொடுக்க வேண்டும். இந்த படம் எல்லாம் இன்டர்நேஷனல் லெவல்லில் இருந்த படம், 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...