Monday, December 18, 2023

GENERAL TALKS - ஃபோன்கள் கணினிகள் விற்பனை குறைந்துவிட்டது !! - காரணம் என்ன ?

 


ஃபோன்கள் கணினிகள் விற்பனை குறைந்துவிட்டது !! - காரணம் என்ன ? இங்கே என்ன சொல்லி என்னதான் பிரயோஜனம் ஒரு அமெஸிங்கான ஆர்க்யூமென்ட் என்றாலும் நம்முடைய பக்கம்தான் நியாயம் என்றாலும் ஒண்ணுமே பண்ண முடியாது. பணம் இருப்பவர்கள் சிஸ்டம்மை வளைத்து வென்றுவிடுவார்கள். பணம் இல்லாதவர்கள் சரியே என்று சொன்னாலும் தப்புதான் ! மக்களுக்கு கொடுத்த பொருளை டிஜிட்டல் பொருளாக இருந்தால் சாஃப்ட்வேர் கம்பெனிக்கள் இந்த மாதிரி ஒரு நோட்டிஃப்பிக்கேஷன் அனுப்பி காலிபண்ணிவிடுகிறார்கள். இங்கே 2011 வரை நாங்கள் விற்ற சாப்ட்வேர் இனிமேல் செல்லாது. புதுசாக 2023 எடிஷன் விட்டு இருக்கிறோம். உங்கள் சொத்துக்களை விற்று இந்த சாப்ட்வேர் வாங்கி கஷ்டப்பட்டுக்கொண்டு இருங்கள் என்றுதான் சொல்கிறார்கள். அப்படியென்றால் 2011 ல் வாழ்நாள் முழுக்க செல்லுபடியாகும் என்று சொன்ன வார்த்தைகள் பொய்தானா ? ஒரு பொருளை விற்றால் அந்த பொருள் வாங்கியவரிடம் இருக்க வேண்டும் - அது பாட்டுக்கு போகிறேன் !! நான் போகிறேன் !! என்று பாட்டு பாடிக்கொண்டு சென்றுவிட கூடாது. இங்கே டிஜிட்டல்லாக என்ன வாங்கினாலும் வாங்கினோம் என்று பெருமையாக சொல்ல வேண்டாம். இ-புக் தவிர்த்து படம் , பாட்டு , சாப்ட்வேர் என்று என்ன வாங்கினாலும் பின்னாட்களில் எடுத்துவிடுகிறார்கள், இப்படி கேவலமாக சம்பாதித்து பெரிதாக காசு பார்த்த கம்பெனிகள் உருப்படியாக ஓடிக்கொண்டு இருக்கும் நல்ல கம்பேனிக்களையும் வாங்கி கடைசியில் இன்னொவேஷன் பண்ணப்போகிறேன் என்றும் கம்பெனியை உயர்த்த போகிறேன் என்றும் வேலை பார்த்த விசுவாசமான ஆட்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் வேலையை விட்டு தூக்கிவிடுகிறார்கள். கடைசியில் நேற்று பெய்த மழையில் இன்னைக்கு பூத்த காளான் கம்பெனிக்கள் காலகாலமாக தொழிலில் நின்று ஜெயித்த கம்பெனிக்களை தோற்கடித்துவிடுகிறது. ஒரு சில கம்ப்யூட்டர் மற்றும் ஃபோன் தயாரிப்பாளர்கள் அவர்களுடைய கம்பெனி ஃபோன்னில் அவர்களின் OS சாப்ட்வேர் மட்டும்தான் OS சாஃப்ட்வேராக இருக்க வேண்டும் என்றும் புது OS போடும் வசதிகளை எடுத்துவிட்டோம் என்றும் சொல்கிறார்கள். இப்போதைய கம்பேனிக்கள் ஃபோன்னை விற்பதை விட வாடகைக்கு விடுவதைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். போதுமான சுதந்திரம் இல்லை , நம்பகத்தன்மை இல்லை , மேலும் நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை. ப்ராடக்ட்களின் வேலை பார்க்கும் நேரம் என்றால் 3 - 4 மாதங்கள் கூட ஒழுங்காக வேலை பார்ப்பது இல்லை. இதுக்கு ஃபைனல்லாக என்ன சொல்கிறேன் என்றால் ஆஃப்லைன்னில் எல்லாமே சேகரித்துக்கொள்ளுங்கள். ஆன்லைன் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க வேண்டாம். காலம் என்னைக்குமே மாறக்கூடியது. இந்த தவறுகள் எல்லாம் எதிர்காலத்தில் சரியாகும் என்பதை கண்டிப்பாக நம்பலாம். அப்படி சரியாகவில்லை என்றால் பின்னாட்களில் பெரிய பஞ்சாயத்து ஆகிவிடும். இதனால் நாம் எப்போதுமே செய்யவேண்டிய விஷயங்களை சரியாக செய்யலாம் !! - இந்த வலைப்பூவில் போடப்படும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக வலைப்பூவை புக்மார்க் பணணி வைக்கவும். தினசரி அப்டேட்க்கு நாங்கள் இருக்கிறோம் (இப்போதைக்கு) . 

மேலும் , நமது புதிய ஸ்பான்ஸர் (இப்போது ப்ரொடக்ஷன்னில் இருக்கும் அடுத்த கட்ட வலைப்பூ - LEARNGURU - MD -  இணைப்பு : GOINPAST.BLOGSPOT.COM - க்கு வலைப்பூ கமிட்டியின் சார்பாக வெற்றிகரமான பாராட்டுக்களை தெரிவித்துககொள்கிறோம் !! ப்ரொடக்ஷன் டெலோலோப்மெண்ட்க்கு பின்னால் ரசிகர்கள் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறொம் !! 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...