வியாழன், 7 டிசம்பர், 2023

CINEMA TALKS - KODI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


கொடி - ஒரு ஷார்ப்பான வெல் மேட் ரிவேன்ஜ் டிராமா !! இரட்டை குழந்தைகளாக பிறக்கும் அன்பு மற்றும் கொடி என்ற அண்ணனும் தம்பியும் வேறு வேறு வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அன்பு ஒரு அமைதியான பொறியியல் கல்லூரி புரொஃபசர்ராக இருக்கிறார் ஆனால் கொடி நேர்மையான கோபமான அரசியல் கட்சி செயலாளராக இருக்கிறார், இந்த இருவரின் வாழ்க்கையிலும் தனித்தனியாக காதல் சென்றுக்கொண்டு இருக்கும்போது கொடி கொல்லப்படுகிறார். இந்த கொலையின் பின்னணியை கண்டறிந்து சம்மந்தப்பட்ட எல்லோரையும் அன்பு கண்டறிந்து பழிவாங்க வேண்டும் என்று கோபமாக வேட்டையாடுவதுதான் படத்தின் கதை, நேர்மையான அரசியல் எந்த அளவுக்கு கடினமான விஷயம் என்பதையும் அரசியலில் நேர்மையான பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு என்னென்ன கஷ்டங்களும் சோதனைகளும் இருக்கும் என்ற ஒரு கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தரமான படம் என்பதால் கண்டிப்பாக பார்க்கலாம். இந்த படத்தில் த்ரிஷா அவர்களுடைய கதாப்பாத்திரம் வேற லெவல் ! எதனால் என்று நீங்கள் கேட்டால் படத்தை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் என்றுதான் நான் சொல்லுவேன் ! நல்ல படம் என்பதால் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் ! கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் வொர்க் பண்ணி இருக்கலாம். இருந்தாலும் படத்துடைய பொடென்ஷியல் கிளைமாக்ஸ்ஸில் நன்றாகவே இருந்தது. 


கருத்துகள் இல்லை:

TECH TALKS - SATA மற்றும் NVME வகை SSD களின் வித்தியாசம் !

SSD: SATA vs NVMe vs PCIe - இவைகள் என்ன ? நவீன SSD சேமிப்புத் தொழில்நுட்பங்களின் முழுமையான விளக்கம் ...