Saturday, December 9, 2023

CINEMA TALKS - STAND BY ME DORAEMON 1 & 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



 இந்த படங்கள் , ஜாப்பனிஸ் அனிமேஷன் ஷோவான டோரேமோன் என்ற ஷோவினை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த ஷோவில் கான்செப்ட் என்னவென்றால் வாழ்க்கையில் எப்போதுமே தோற்றுக்கொண்டே இருக்கும் திறமையற்ற பையனாக இருக்கும் நோபிட்டாவுக்கு வருங்காலத்தில் இருந்து உதவி பண்ணுவதற்காகவே வந்திருக்கும் உயிருள்ள ஒரு ரோபோட்தான் டோரேமோன். நோபிட்டாவுக்கு எதாவது பிரச்சனை என்றால் டோரேமோன் அவனுடைய இன்ஃபினிட்டி கலைக்ஷனில் இருந்து எதாவது ஒரு கேடஜட் மாயாஜால கருவியை எடுத்து நோபிட்டாவை ஹெல்ப் பண்ணி காப்பாற்றிவிடுவான். STAND BY ME DORAEMON - இந்த படத்தில் நோபிட்டா‌ தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருப்பதால் எதிர்காலத்தில் காதலிக்கும் பெண்ணாக இருக்கும் ஷிஷூக்காவை திருமணம் பண்ணவேண்டும் என்று டைம் டிராவல் பண்ணி டோரேமோனின் உதவியுடன் காலத்தை மாற்றிவிடுவான். இப்போது டோரேமோன் நிறைய உதவிகளை செய்வதால் நோபிட்டாவும் அவனுடைய நண்பன் நன்றாக இருக்க வேண்டும் என்று அவனுடைய நன்மைக்காக அவனை காயப்படுத்தும் ஒரு செட்டிங்ஸ் ப்ரோக்ராமை டிஸபில் பண்ண அவனுக்காக ரிஸ்க் எடுத்து சண்டை போட்டு ஜெயித்து காட்டுவான். டோரேமோன் படங்கள் நிறைய 2டி அனிமேஷனில் இருந்தாலும் CGI டெக்னாலஜியில் இதுதான் முதல் படம் என்பதால் காட்சி அமைப்புகள் மற்றும் கம்ப்யூட்டர் வரைகலை பெஸ்ட்டாக பண்ணி இருக்கிறார்கள்‌. இந்த படத்துக்கு அடுத்த பாகமாக வெளிவந்த படம்தான் STAND BY ME DORAEMON 2 - இந்த படத்தில் நோபிட்டா அவனுடைய சின்ன வயதிலேயே இறந்து போன அவனுடைய பாட்டிக்கு எப்படியாவது நோபிட்டாவின் திருமண நாளை காட்டிவிடுவேன் என்று ப்ரோமிஸ் பண்ணிக்கொடுத்துவிடுவான் ஆனால் காலத்தை கடந்து டைம் டிராவல் பண்ணுவாதாலும் டொரெமோன் பயன்படுத்திய கருவிகளில் கொஞ்சம் மிஸ்டேக் இருப்பதாலும் எதிர்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளாலும் நோபிட்டாவின் கல்யாண நாள் தாறுமாறான பிரச்சனைகளில் செல்கிறது. இந்த நிலைமையை டோரேமோன் மற்றும் நோபிட்டா எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் இந்த படங்களின் திரைக்கதை. 3 D CGI வொர்க்ஸ் எல்லாமே இந்த படத்தில் ரொம்பவுமே நேர்த்தியாக இருக்கும். ப்ராடக்ஷன் வேல்யூவில் எந்த குறையுமே படத்தில் இருக்காது. இன்டர்நேஷனல் சினிமா ஆடியன்ஸ்ஸாக இருந்து டோரேமோன் என்ற அனிமேஷன் தொடர் பற்றி நிறைய விஷயங்கள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் இந்த அனிமேஷன் படங்கள் உங்களுக்கு நல்ல சாய்ஸ்ஸாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...