Wednesday, December 6, 2023

CINEMA TALKS - நம்ம ஊரு CINEMA எதனால் ஸ்பெஷல் ? - TAMIL ARTICLE

 இந்திய சினிமா எதனால் உலக சினிமாவில் இருந்து மாறுபட்டு இருக்கிறது என்றால் அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது , கலாச்சாரங்கள் மற்றும் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் , மொழிகள், நடிகர்கள் , நடிகைகள் , இயக்குனர்கள், மியூசிக் என்று ரசனையில் இருக்கும் எதிர்பார்ப்புகள் இந்த மாதிரி ஏகப்பட்ட விஷயங்கள் இங்கே இருகிறது. ஒரு பிலிம் ப்ரொடக்ஷன் என்பது இங்கே நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் விஷயம். பொதுவாக செய்யும் வேலையே தெய்வம் என்ற ஒரு கான்ஸேப்ட் இங்கே இருப்பதால் நம்ம சினிமா உலக சினிமாக்களோடு கம்பேர் பண்ணும்பொது நம்ம ஆடியன்ஸ்க்கு பிடித்தது என்னவோ அதை கொடுக்கதான் முயற்சி பண்ணும் , அது பறந்து பறந்து அடித்து ஃபைட்டர்ஸை பறக்கவிடும் ஒரு கமர்ஷியல் சண்டைக்காட்சியாக இருக்கலாம் இல்லையென்றால் வெளிநாட்டில் சென்று எடுத்து காட்சிப்படுத்தப்பட்ட ஒரு பாடல் காட்சியாக இருக்கலாம் , அடிப்படையில் நோக்கம் என்னவேன்றால் சிறப்பான பொழுதுபோக்கு விஷயங்களை படத்தில் கொடுப்பதுதான். இங்கே மியூசிக் இன்டஸ்ட்ரி - ஆல்பம்களை வெளியிட்டு கான்செர்ட்களை பண்ணிவிட்டு படத்துக்கு தேவைப்பட்டால் படத்தில் சேர்த்துக்கொள்ளலாம் என்று எல்லாம் கிடையாது. மியூசிக் இன்டஸ்ட்ரியே பெரிய அளவில் சினிமாவை சார்ந்து உள்ளதால் கண்டிப்பாக மியூசிக்கையும் சினிமாவையும் பிரிக்கவே மாட்டோம். இன்னொரு விஷயம் , ஹாலிவுட் படங்களை போல வண்ணங்களை இல்லாமல் படம் மொத்தமுமே கருப்பு , வெள்ளை , சாம்பல் , பிரவுன் என்று எடுக்காமல் ரொம்ப கலர்ஸ் நிறைந்த படமாக எடுப்பதுதான் நம்ம ஆடியன்ஸ்க்கு பிடிக்கும். தி எக்ஸ்ட்ரார்டினேரி ஜேர்னி ஆஃப் பாக்கிர் அப்பறம் தி மேட்ரிக்ஸ் ரேஸரக்ஷன்ஸ் படங்களை எடுத்து பாருங்களேன் நல்ல கலர்ஸ் இருந்தது ஆனால் பாக்ஸ் ஆபீஸ் டிஸப்பாயிண்ட்மெண்ட் என்று ரிசல்ட் இருக்கிறது அல்லவா ? இதனால்தான் ஆடியன்ஸ்க்கு நாங்கள் அவர்களுக்கு பிடித்தது எதுவோ அதை கொடுக்க முயற்சி பண்ணுகிறோம் என்பதை முக்கியமான விஷயமாக கருதுகிறோம். மேலும் இங்கே எல்லாமே சோதனை அடிப்படையில் எக்ஸ்ப்பெரிமேன்ட்தான் !! சில நேரங்களில் சொந்த லேன்க்வேஜ் படம் சோதப்பிவிடும் ஆனால் டப்பிங் படம் கெத்து காட்டும். இங்கே ஆடியன்ஸ்க்கு நிறைய ரசனை இருக்கிறது, ஒரு சிலருக்கு ப்ரேமம் படம் போல கியூட்டாக இருக்க வேண்டும் இன்னொரு சிலருக்கு கே.ஜி.எஃப் படம் போல மாஸ்ஸாக இருக்க வேண்டும். இந்த மாதிரி ஆயிரம் விஷயங்கள் இந்திய சினிமாவை தனித்து காட்ட இருக்கிறது. ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்மந்தம் இருக்காது. இங்கே பொழுதுபோக்கு பிரையாரிட்டி என்பதால் மிக்ஸ் ஆஃப் ஜேனர்ஸ் என்று கதை இருக்கும். இந்த மாதிரி பக்கம் பக்கமாக நிறைய எழுதலாம். 



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...