VENOM - 2018 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இங்கே மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸ்ஸில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருந்த காலத்தில் ஸ்பைடர்மேன்னை மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்ஸில் கொண்டுவர பேர்மிஷன் கொடுத்த சோனி தன்னால் நிறைய விஷயங்களை பண்ணி இந்த இழப்பை கூட சமாளிக்க முடியும் என்று பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாத ஒரு படத்தை உலக அளவில் பாக்ஸ் ஆபீஸ் கல்லா காட்டும் படமாக சாதனை படைக்க காரணம் என்ன ? இந்த இடத்தில் ரொம்ப நுணுக்கமான விஷயத்தை கவனிக்கணும் , படத்தில் பெரிதாக எந்த கன்டன்ட்டும் இல்லை என்றாலும் இன்பினிட்டி வார் படத்துக்கு அப்புறம் அவெஞ்சர்ஸ்க்கு என்ன நடந்தது என்ற ஆர்வம் ரசிகர்களுடம் நெருப்பு போல எரிந்துகொண்டு இருந்தது. சோனி இந்த விஷயத்தை சாதகமான முறையில் பயன்படுத்திக்கொண்டு பின்னாட்களில் மார்வேல்லை மிரட்டி மல்டிவேர்ஸ் என்று கதையை விட்டு இந்த மொக்கை படத்தை கணக்கு காட்டி சேர்த்துவிடலாம் என்று ஒரு பக்காவான பிளான் போட்டு இருந்தது. ஸ்பெடர்மேன்னை சோனிக்கும் , ஹல்க்கை யூனிவர்சல்க்கும் ,எக்ஸ் மென் படங்களை 20 செஞ்சுரி பாக்ஸ்க்கும் தாரை வார்த்த மார்வேல்லுக்கு படம் மட்டும் சூப்பர் வில்லன் படம் இல்லை , தயாரித்த கம்பெனியே சூப்பர் வில்லன் கம்பெனிதான் என்று தெரிந்து வருவதற்குள் பாக்ஸ் ஆஃப்பிஸில் ரசிகர்களின் பணத்தை அள்ளிவிட்டது. அவேன்ஜர்ஸ்ஸும் இல்லை, ஸ்பைடர் மெனும் இல்லை ஆனால் படம் ஓடிவிட்டது. இந்த படம் பார்த்தவர்களுக்கு தெரியும் பிரியாணி கிடைக்கும் என்று ஆசையில் எதிர்பார்த்து வந்தவர்களுக்கு தக்காளி சாப்பாட்டை வெங்காய மோர் போட்டு கொடுத்து பணத்தை பிடுங்கிக்கொண்டது தனி கதை.
பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது என்று கேட்டு இருப்பீர்கள் ஆனால் பேப்பர் பூக்ககளை வைத்த கதையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? இங்கே ஒரு சின்ன ஸ்டேட்டஸ் ஷார்ட்ஸ் போட்டாலே கோர்ட் வரைக்குமே இழுக்கும் ஒரு கம்பெனி மியூசிக்கை உரிமைகளாக வாங்கி ஒண்ணுமே இல்லாமல் சம்பாரிக்கும் கம்பெனி, நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசியுமாம் என்ற பழமொழியை நம்பி வெளிவிட்ட அடுத்த மொக்கை பதிப்பு. ரசிகர்கள் எல்லாம் முட்டாள்கள் நான் மட்டும்தான் புத்திசாலி என்று இருக்கும் ஐடியாலஜியை உடைத்த ஒரு படம் இந்த படம். போன படத்தில் டாம் ஹார்டி தனியொரு மனிதராக படத்தை காப்பாற்றினார் என்றால் இந்த படத்தில் ஜாராட் லீட்டோவும் தனி ஒரு மனிதராக சிறப்பாக நடித்து படத்தை காப்பாற்றி இருக்கிறார். கிளைமாக்ஸ்ல இரத்தம் குடிக்கும் காட்சிகள் எல்லாம் கடவுளே என்று இருக்கும். படத்துக்கு செட் ஆகாமல் எது கிறுக்கினாலும் கதை என்று கோடி கணக்கில் செலவு பண்ண தலைவனால் மட்டும்தான் எப்படி முடிகிறதோ ? இந்த படம் வொர்ஸ்ட் என்றால் உங்க வீட்டு வொர்ஸ்ட் இல்லை. எங்க வீட்டு வொர்ஸ்ட் இல்லை. அவ்வளவு மரண வொர்ஸ்ட். இந்த மாதிரி ஒரு படத்தை தப்பி தவறி கூட பார்த்துவிட கூடாது. அப்படிப்பட்ட ஒரு மோசமான படம். எதிரிக்கு கூட இந்த படத்தை பார்க்கும் நிலை வந்துவிட கூடாது.
இந்த மார்வல் ஸ்டுடியோஸ் எழுதிய மேய்ன் ஷீட்க்கு சம்மந்தமே இல்லாமல் சோனி அடிஸ்னல் ஷீட் வாங்கிய கதையை கூட விட்டுவிடுங்கள் , பார்ட் 1 ஆஃப் 1 என்று ஒரு யுனிவெர்ஸ் காலியாக போன கதை தெரியுமா ? அதுதான் மம்மி படம் !! டாம் க்ருஸ் சவால்களை சந்தித்து உயிரை கொடுத்து சண்டை போடுவது எல்லாமே நம்ம உயிரோடு வந்த அரபு நாட்டு மம்மி அக்கா நம்ம ஹீரோவை பிடித்து கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் மேட்டர் பண்ணாமல் இருக்கவேண்டும் என்று எஸ்கேப் ஆவதற்குத்தான் என்று கதையில் டுவிஸ்ட் இருந்தால் இது ஒரு எல்லோரும் பார்க்கும் கௌரவமான படம் என்று நம்ப முடிகிறதா ? போன மம்மி படங்களின் கெத்து எல்லாமே மொத்தமாக இறக்கி கிலோ கணக்கில் காசை கொட்டி புதுவகையாக யூனிவேர்ஸல் மான்ஸ்டேர்ஸ் என்று ஒரு UCU தொடங்க பிள்ளையார் ஸிம்பல்லாக போடப்பட்ட முதல் பால்லே நோ பால் என்று அவுட்டாக சென்றுவிட்டது. மற்றபடி என்ன சொல்லவேண்டும் என்றால் நடிப்பு பிரமாதம், திரைக்கதை மொக்கை , மியூசிக் சுமார், ஆர்ட் வேற லெவல் என்று நல்லதும் கேட்டதும் கலந்து மிக்ஸ் ஆனதால் கலவை படமாக வெளிவந்ததுதான் கஷ்டம். டைட்டானிக் காதலுக்கு பின்னால் நம்ம எகிப்து மம்மி அக்கா காதல் கைகூடாமல் போனதால்தான் இந்த காதல் தோல்வி மனதுக்கு பாரமாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment