Thursday, December 21, 2023

GENERAL TALKS - LEARN MORE UNDERSTAND MORE - ஒரு கருத்து பதிவு !!

 


ஒரு பாய்ண்ட் ஆப் சக்ஸஸ் என்று தேர்ந்தெடுக்கிறோம். நாம் எந்த இடத்தில் இருந்து தொடங்குகிறோமோ அந்த இடத்தில் இருந்து நம்முடைய பாதையை செலக்ட் செய்து பயணத்தை ஆரம்பிக்கிறோம். இந்த இரண்டு விஷயங்களுக்கும் நடுவில் ஒரு பயணம் இருக்கிறது. இந்த கிரே ஏரியாவை பற்றி நிறைய பேர் யோசிப்பதே இல்லை. இது ஒரு ஸ்டேடியம் பற்றி தெரிந்துகொள்ளாமல் கிரிக்கெட் விளையாடி வெற்றிக்கோப்பையை கைப்பற்றவேண்டும் என்று யோசிப்பது போன்றதாகும்‌. ஒரு மொத்தமான இம்பாஸிபில்லான விஷயம். இங்கே சக்சஸான நிறைய பேர் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைய இடங்களுக்கு சென்று சாதகமான மற்றும் பாதகமான விஷயங்களை எல்லாம் பார்த்துதான் வெற்றியை அடைந்து இருக்கிறார்கள். நீங்கள் எந்த துறையே தேர்ந்தெடுத்தாலும் சரி அந்த துறைக்கான நுட்பமான பயனுள்ள மற்றும் அடிப்படையான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். இங்கே இந்த கிரை ஏரியாவை கடந்து போகவேண்டும் என்றால் கண்டிப்பாக பணம் தேவை. பணம் இல்லாமல் இந்த கிரே ஏரியாவை கடந்து போக முடியாது. இந்த கிரே ஏரியா உங்களுக்கு மாறுபட்ட ரேண்டம் ஆன விஷயங்களை கொடுத்துக்கொண்டே இருக்கும். இந்த மாதிரி கொடுக்கப்படும் விஷயங்கள் நம்முடைய வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களுக்கும் ரொம்பவே முக்கியமானது. இப்படி கிடைக்கும் அனுபவங்களில் குறிப்பிடத்தக்க கொஞ்சம் அனுபவங்கள் உங்களுக்கு பூதாகரமான முன்னேற்றத்தை கொடுக்கும். அதாவது ஒரு ஜெயண்ட் லீப். குறிப்பிடத்தக்க இன்னும் கொஞ்சம் அனுபவங்கள் உங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய அனுபவங்கள் மிகவுமே முக்கியமானது. மாரல் வேல்யூஸ் ஒரு பக்கம் உங்களை வாழ்க்கையில் நல்ல எண்ணங்களையும் புனிதமான விஷயங்களையும் மட்டுமேதான் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தும். அதுமட்டுமேதான் வாழ்க்கையா என்று கேட்டால் அதுதான் இல்லை. வாழ்க்கை என்பது நல்ல விஷயங்கள் மற்றும் கெட்ட விஷயங்கள் என்று இரு வகை விஷயங்களுமே கலந்ததுதான். கெட்ட விஷயங்களை வாழ்க்கையில் தெரிந்துகொள்ளவே கூடாது என்பது காவல்துறையில் இருப்பவர்கள் குற்றங்களையும் கொடியவர்களையுமே பற்றி தெரிந்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சொல்வது போன்றதாகும். நம்முடைய வாழ்க்கை கெட்ட விஷயங்கள் எலலாமே கலந்ததுதான். இவைகளை பிரித்துக்கொண்டு இருந்தால் வாழ்க்கை நமக்கு கொடுத்த 80 வருடங்களும் வீணாகப்போவதை உங்களுடைய கண்களால் பார்க்கலாம். இங்கே ஒரு வெற்றியை நீங்கள் அடையவேண்டும் என்றால் உங்களின் கிரே ஏரியாவை தெரிந்துகொண்டு வேலைபார்ப்பட்டது எப்போதுமே பரிந்துரைக்கப்படுகிறது. 



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...