இன்னைக்கு AI நிறைய கன்டேன்ட்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. சொந்தமாக கன்டேன்ட் எழுதி கைகள் வலிக்கிறது என்ற காரணத்தால் நான் கொஞ்சம் கணிதம் பக்கம் AI யை பிரயோஜனப்படுத்தலாம் என்று இப்போது எல்லாம் கணினி மேட் HTML கோட்களை பயன்படுத்தி கணித புள்ளிவிபரங்களை டிசைன் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இது கண்டிப்பாக எதிர்காலத்தில் பிரயோஜப்படும் ஆனால் இப்போது கோடிக்கணக்கில் பணம் வைத்து இருக்கும் ஒருவர் AI மூலமாக கான்டேன்ட் உருவாக்கி அப்படி உருவாக்கப்பட்ட போட்டோ , வீடியோ , மியூசிக் இவைகளுக்கு நான்தான் உரிமையாளர் என்று சொல்லி ராயலிட்டி பார்த்து கோடி கோடியாக சம்பாதித்துக்கொண்டே இருந்தால் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி நடைபெறும் அல்லவா ? இது ஒரு TAMIL BLOG . நான் வெறும் சினிமா பேசியே சம்பாதித்துவிடலாம். இப்போது நான் என்ன பண்ணுகிறேன் என்றால் என்னுடைய வாழ்க்கை ஆபத்தில் கொண்டுபோக்கும் என்று தெரிந்தும் AI யால் பணத்தின் மதிப்பு குறைவதையும் வறுமை அதிகமாவதையும் எதிர்த்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு தலைக்கு மேல் ஒரு கூரை , அடுப்பு சமையல் பண்ண சாப்பாடு , போட்டுக்க நல்ல உடைகள் என்று எல்லாமே இருக்கலாம். ஆனால் இவைகளுமே இல்லாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவது எவ்வளவு கஸ்டமான விஷயம் தெரியுமா ? AI ல் எல்லோருமே எல்லாமே பண்ணிக்கொள்ளலாம் , பள்ளிக்கூடம் போக வேண்டாம் , வேலைக்கு போக வேண்டாம் , உடல்நிலை சரியில்லை என்றால் மருந்துகள் கூட AI எழுதி கொடுக்கும் என்று AI கன்னா பின்னாவென்று தாறுமாறாக வசதிகளை அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருந்தால் நாளைக்கு வேலைக்கே போகாமல் வெறும் AI மட்டுமே வைத்து உட்கார்ந்த இடத்தில் இருந்து பணம் சம்பாதிக்கலாம். இது பார்க்க நன்மையாக இருக்கலாம் ஆனால் எல்லோருமே வேலைக்கு போகாமல் சும்மா உட்கார்ந்துகொண்டு பணம் சம்பாதித்தால் சாப்பாடு விலை , மருந்துகள் விலை என்று எல்லாமே கிடுக்கிடுவேன்று அதிகமாக மாறிவிடும். ஒருவர் கூட வேலை செய்ய முன்வரமாட்டார்கள். மக்கள் அதிகம் பேர் வறுமை காரணமாக போதை பழக்கத்தில் மாட்டிக்கொண்டு வயிறு வலிக்காமல் இருக்க சாப்பிட்டால் போதும் போதையை போட்டுக்கொண்டு தூங்கினால் போதும் என்று மாறிவிடுவார்கள். உலகமே மக்களை அடக்கம் பண்ணும் இறுதி சுடுகாடாக மாறிவிடும். இந்த AI மூலமாக வேலை எல்லோருக்குமே கிடக்காமல் போய்விடும். குடும்பத்தில் இருக்கும் பெண்களை காப்பாற்ற முடியாமல் ஆண்கள் வேலைக்கு போக வேலை கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள். இது மட்டும் அல்ல இன்னும் ஆயிரம் பிரச்சனைகள் சொல்லலாம். தற்கொலைக்கு இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் தூண்டிவிட்டுவிடும். இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் AI உருவாக்கிய கான்டேன்ட்களுக்கு யாருமே சொந்தம் கொண்டாட முடியாது என்று ஒரு சட்டம் போட்டு #MAKEEVERYAICONTENTASPUBLICDOMAIN. என்று ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும். உலக அளவில் AI ஜெனரேட் பண்ணும் கான்டேன்ட்கள் எல்லாமே பொது சொத்து என்று உலக நாடுகள் ஆன்னோன்ஸ் பண்ண வேண்டும்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment