Monday, December 11, 2023

GENRAL TALKS - கம்ஃபோர்ட் வட்டத்துக்குள்ளே இருந்தால் நடக்கும் பிரச்சனைகள் !

 நிறைய நேரங்களில் வாழ்க்கைக்கான சரியான அப்ரோச் என்ன என்பதையே நம்மால் முடிவு எடுக்காமல் விட்டுவிடுகிறோம், இங்கே குளத்தில் இருக்கும் முதலை போல தன்னுடைய வட்டரத்துக்குள் வாழ்ந்துவிட்டு போவது நல்லதா ? இல்லை என்றால் ஒரு மிகப்பெரிய கடலில் மீனாக சுற்றிக்கொண்டு இருப்பது நல்லதா ? அடிப்படையில் ஒரு மனிதன் தன்னுடைய பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்க வேண்டும் என்று முடிவு எடுப்பது வெளியில் இருந்து பார்க்க சரியாக இருந்தாலும் காலத்தில் நடக்கும் மாற்றங்களை பொறுத்து நமக்கு ஒரு சில திறன்கள் கடைசி வரைக்கும் கிடைக்காமல் போய்விடும். நமது வாழ்க்கையில் ஒரு முறையாவது கப்பலில் கடல் பயணம் செய்ய வேண்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். இது ஒரு ஒரு மனிதனுக்கும் ரொம்ப அடிப்படையான ஆசையாக இருக்க வேண்டும். கிராமப்பகுதியில் ஒரு சில பேர் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் கடற்கரையை பார்க்காமலே கண்ணை மூடிவிடுகின்றனர். பாதுகாப்பு வளையம் இந்த மாதிரி பிரச்சனைகளைதான் நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருகிறது. பாதுகாப்பு வளையத்தில் இருந்தால் நம்மால் இதுதான் நடக்கும் என்று அஸ்ஸம்ப்ஷன் பண்ண முடியுமே தவிர்த்து ஆக்சுவல்லி அங்கே உண்மையில் என்ன இருக்கிறது என்று பார்க்க மறுத்துவிடுவோம் ! நமது வாழ்க்கையில் முதல் முறையாக கடற்கரையை பார்க்கும்போதுதான் நாம் கடற்கரை என்பது எப்படி இருக்கும் என்று எதிரபார்க்கின்றோம் என்ற கற்பனையை உடைத்து கடல் என்பது இப்படித்தான் இருக்கிறது என்று உண்மையான சோர்ஸ்ஸை தெரிந்துகொள்வோம். இங்கே அன்பே வா படத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் அவர்களை போல புதிய வானம் புதிய பூமி என்று நாம் நினைத்தவுடனே உலகத்தை சுற்றி பார்க்க சென்றுவிட முடியாது. தனியாக இருப்பவர்களுக்கு பயணங்கள் ரொம்ப பெரிய சவால்களாகத்தான் இருக்கும். குறிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் பாதுகாப்பை விட்டு வெளியே வருவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை என்பதால் அடிப்படையில் பாதுகாப்பு வளையத்தில் வாழ்வது எல்லா நேரங்களுக்குமே நன்மையை கொடுத்தாலும் வெளி உலக அனுபவங்களில் இருந்து நிறையவே பின்னடைவில் இருக்க வைத்துவிடுகிறது. வெளியே இருக்கும் உலகம் என்பது காலத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் ஒரு இடம். இந்த இடத்தை சுற்றிப்பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். மீடியாக்கள் சொல்லும் விஷயங்களை மட்டுமே நம்பி முடிவெடுக்க கூடாது இல்லையா ?

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...