Monday, December 18, 2023

CINEMA TALKS - SAAHO - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 



ஒரு காவல் துறை சிறப்பு பிரிவு ஒரு இன்டர்நேஷனல் லெவல் குற்றங்களை செய்யும் பணக்கார அமைப்பை பிடிக்க நிறைய முயற்சிகள் செய்கிறது. தகவல்களின் சேகரிப்பு  மற்றும் சிறப்பான புத்திசாலித்தனத்தோடு கடினமாக போராடிக்கொண்டு இருக்கிறது, அப்போதுதான் ஒரு துணிவான அதிகாரி அந்த மேஷனுக்கு தலைமை பொறுப்பு ஏற்று அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தவே திட்டங்கள் சிறப்பாக வெற்றி அடைகிறது. ஒரு பக்கம் காதல் சென்றுகொண்டு இருக்க இன்னொரு பக்கம் இந்த விசாரணையில் பிடிபடவேண்டிய சாகோ என்ற குற்றவாளிதான் இத்தனை நாளாக தலைமை அதிகாரியாக நடித்து இருந்து காவல் துறையின் அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டுவிட்டார் என்று ஒரு பயங்கரமான திருப்பம் கொடுத்து இருக்கிறார்கள் , இதன் பின்னால் கதை இன்னமும் ஸ்வரஸ்யமாக இருக்கிறது. ப்ரொடக்ஷன் வேல்யூ இன்டர்நேஷனல் லெவல்தான் , அனிமேஷன் அண்ட் விஷுவல் எஃபக்ட்ஸ் ஒரு அளவுக்கு பெஸ்ட்தான். ஒரு பேன் இந்தியன் வெளியீட்டில் வெளிவந்த படம் எந்த அளவுக்கு மாஸ்ஸாக இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மாஸ் இந்த படத்தில் இருக்கிறது. பிரபாஸ் பாகுபலியின் வெற்றிக்கு பின்னால் ரொம்பவுமே சரியான ஒரு படம் செலக்ட் பண்ணி இருக்கிறார், திரைக்கதை கொஞ்சம் வொர்க் பண்ண வேண்டும் , மியூசிக் அனிருத் , வேற லெவல். குறையாக சொல்ல ரொம்பவுமே சின்ன சின்ன விஷயங்கள்தான் தென்பட்டாலும் ஒரு நல்ல மாஸ் வெளியீடு இந்த படம் என்று கண்டிப்பாக சொல்லலாம். குறிப்பாக சண்டை காட்சிகள் வேற லெவலலில் இருந்தது. இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...