Monday, December 25, 2023

GENERAL TALKS - கதைகளுடைய முக்கியத்துவம் என்ன ?




இங்கே கதைகளை எழுதுவதில் உள்ள பிரச்சனை என்ன ?, ஒரு கதை எந்த அளவுக்கு இண்டரெஸ்ட்டிங் ஆனது என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை. அந்த கதையுடைய வேல்யூதான் மிகவுமே முக்கியமான விஷயம். இங்கே இதனை உண்மையான வாழ்க்கையில் கம்பெரிஸன் எடுத்துக்கொள்ள திரைப்படங்களையே எடுத்துக்கொள்ளலாமே ! ஒரு படம் நல்ல இண்டரெஸ்ட்டிங்கான கதையாக இருக்கும் ஆனால் தோற்றுப்போய்விடும். இன்னொரு பக்கம் ஒரு படம் எந்த விதமான வகையிலும் மொக்கையாக இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ்ஸில் வெற்றியை குவித்து பணமாக சேர்த்துக்கொடுப்பதால் பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 என்று அதுபாட்டுக்கு ஒரு வெற்றி சாதனையை நிகழத்திக்கொண்டு இருக்கும். இப்போது அடிப்படையில் இங்கே என்ன நடக்கிறது. ஒரு வெற்றி உங்களுக்கு அடுத்த படிக்கட்டை எடுத்து வைக்க போதுமான சக்தியை கொடுக்கிறது. இன்னொரு பக்கம் ஒரு தோல்வி உங்களுக்கு இந்த படிக்கட்டில் நின்றுகொண்டு இருப்பதற்காக இருக்கும் அனுமதியை பறித்து பின்னுக்கு அனுப்புகிறது. இப்போது இந்த வெற்றி தோல்வி என்ற விஷயங்களை கதைகளுக்கு கொண்டுவரலாம். ஒரு இன்டர்நேஷனல் பழமொழி என்ன சொல்கிறது என்றால் இங்கே இருக்கும் எல்லா கதைகளுக்கும் அந்த கதைகளை ரசித்து பாராட்ட தனித்தனியான இணவிஜூவல் ரசிகர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஒரு கதை உங்களுக்கு நன்றாக இருக்கிறது என்பதற்காக எல்லோருமே நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதே போல ஒரு கதை உங்களுக்கு நன்றாக இல்லை என்பதற்காக எல்லோருமே நன்றாக இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு திரைப்பட காட்சியை பார்க்கும்போது அந்த திரைப்படத்தில் இருக்கும் நடிகர்களுக்கு நடிகைகளுக்கு வியர்க்க கூடாது என்பதற்காக ஒரு கூலிங் ஃபேன் எப்போதுமே இருந்துகொண்டே இருக்கும். காற்றில் முடிகள் அசைந்துகொண்டு இருக்கும். அப்போதுதான் அந்த காட்சி பார்க்க உயிரோட்டமாக இருக்கிறது. இதுதான் கதைகளுக்கும் தேவைப்படுகிறது. கதைகள் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்றால் அந்த கதையின் வார்த்தைகள் துரிதமான குளிர்ச்சியான நடையாக சலிப்பற்று செல்ல வேண்டியது உள்ளது. ஒரு கதை என்பது  மனப்பாடம் பண்ணி சொல்லவேண்டிய விஷயம் அல்ல. ஒரு கதை இந்த உலகத்தில் உங்கள் கிரியேட்டிவ் , அனாலிஸிஸ் , மற்றும் ப்ரொடக்டிவ் வேலைகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து நேரம் எடுத்து உருவாக்க வேண்டிய ஒரு விஷயம், இந்த உலகத்துக்கே ஒரு கதை பிடிக்கவில்லை என்றாலும் அந்த கதை பேர்சனலாக ஒருவருக்கு பிடிக்கிறது என்றால் அந்த கதை அவருக்காக உருவாக்கப்பட்டது என்றே அர்த்தம். இதனால் ஒரு கதை எழுதும்போது அந்த கதையை மொத்தமாக எழுதிவிட்டு வெற்றி அடையும் அளவுக்கு எடிட்டிங் பண்ணிவிட்டு பப்ளிஷ் பண்ணுங்கள். அதுதான் சிறப்பான விஷயம். இதனை மிகவும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கதைகளில் எப்போதும் சொற்களை விட செயல்களே அதிகமாக வெற்றியை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.  கதைகள் சுவாரஸ்யமானதும் பொழுதுபோக்கு மதிப்பு நிறைந்ததாக இருந்தால் மட்டுமே கதைகள் வெற்றிகளை அடைகின்றன ! கதை எழுதுவது எப்படி என்று புத்தகங்களை வாங்கி படித்தாலும் அடிப்படையில் ஒரு சுவாரஸ்யமான கதைகளையோ நாவல்களையோ எழுத இன்னும் நிறைய விஷயங்கள் தேவைப்படுகிறது. இது பொதுவாக எழுத்தாளராக நான் முயற்சி செய்ததில் நானாக தெரிந்துகொண்ட கருத்துக்களின் தொகுப்பு. இது போன்று நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள இந்த தமிழ் வெப்சைட் வலைத்தளத்தை கண்டிப்பாக சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள் !!

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...