Tuesday, December 19, 2023

GENERAL TALKS - இன்டென்ஷன்ஸ் நிறைந்த சினிமா களம் !!


இங்கே பிக்ஷன் சம்மந்தப்பட்ட எந்த துறையை எடுத்துக்கொண்டாலுமே அந்த துறைகளில் கடுமையான போட்டி நிலவுவதை காணலாம். மக்கள் என்னைக்குமே பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த வொர்க்ஸ்களுக்கு நிறைய வரவேற்பு கொடுப்பவர்கள்தான். ஆனால் இப்போது ஒரு படத்துடைய வெற்றிக்கு நிறைய விஷயங்கள் பின்னணியில் தேவைப்படுகிறது. இது லவ் டுடெவாக இருக்கட்டும் , ஃபைட் கிளப் என்று இருக்கட்டும் அல்லது விசாரணை போன்ற ஒரு படமாக கூட இருக்கட்டும். கடுமையான போட்டி ஒரு நல்ல சினிமா ஆடியன்ஸ்க்கு சென்று அடையவேண்டும் என்ற வகையில் இருக்கிறது. ஒரு மோஷன் பிக்சர் நீங்கள் கொடுத்த டிக்கெட் அளவுக்கு மதிப்பு உள்ள விஷயத்தை கொடுக்க வேண்டும். அதுக்காக படும் கஷ்டம்தான் ரொம்ப அதிகம். பிலிம் மேக்கிங் மிகவும் கடினமான ப்ரோஸஸ், கெனனான் கேமிராவும் வல்ட்ராக்ஸ் சூப்பர் லென்ஸ்ஸும் இருந்தால் மட்டுமே படம் தயாரிப்புக்கு போதும் என்று முடிவு பண்ண கூடாது. பிலிம் எப்போதுமே பிலிம்மேக்கிங் கேமிராவில் ஷாட் பண்ணி பின்னால் மிக துல்லியமாக மாதக்கணக்கில் எடிட் பண்ணி காட்சிகளை இம்ப்ரூவ் பண்ண வேண்டும். இன்னைக்கு தேதி வரைக்குமே ரீ-ரெக்கார்டிங் வரைக்கும் கொண்டுபோய் ஒரு படத்தை கம்ப்ளீட் பண்ணிவிட்டு பின்னால் வெளியிடுவது வரைக்கும் எல்லாமே கடினமான பிராசஸ்தான். ஃபிக்ஷன் வொர்க்ஸ் வெளியீடு ஒரு காஸ்ட்லி பிஸ்னஸ். ஒரு புத்தகம் எழுதுவது என்பது கூட மாதக்கணக்கில் எழுதி எடிட் பண்ணி பின்னால் பப்ளிஷ் பண்ணி விற்பனை பண்ணி பணம் சம்பாதிக்கும் வரைக்குமே செல்லக்கூடிய ஒரு பெரிய பிராசஸ். இந்த கொடுமைக்கு பின்னாட்களில் என்னை பார்த்து நகல் எடுத்துவிட்டார்கள் என்று ஏதாவது மூன்றாவது மனிதரும் கேஸ் போடத்தான் செய்வார். இங்கே வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளது. ப்ரொடியூஸர்கள் எல்லோருமே ஒரு அமைப்பு அவர்களுடைய நம்பிக்கையை பெற்று சப்போர்ட் இருந்தால்தான் படம் வெளிவருகிறது. பணம் மீட்கப்படுகிறது. இதனால் சினிமா என்பது சம்பாதிக்க பயன்படும் தொழில் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். இந்த விஷயம் இன்டென்ஷனலாக ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் ஒரு போராட்டமாகத்தான் இப்போது இருக்கிறது. உங்களுக்கு சோசியல் மீடியா வரவேற்பு கிடைத்தால் உங்களிடம் ஒரு ஷார்ட் பிலிம் இருந்தாலும் அல்லது ப்ரொடக்ஷன் வேல்யூ நிறைந்த ஒரு பெரிய மோஷன் பிக்சர் இருந்தாலும் உங்களின் நேரடி சக்தியில் கவனமாக மார்க்கெட்டிங் செய்து இணையத்தில் மட்டுமே வெளியிடுவது போதும் என்று இப்போதைய நிலை இருக்கிறது. காலாகாலமாக இந்த இயல் இசை நாடக விளையாட்டு நிறைய பேருடைய வாழ்க்கையில் அதிகமான பிளஸ் அல்லது அதிகமான மைனஸ் என்று கொண்டுவந்து இருப்பதை கண்டிப்பாக மறுக்க முடியாது. இதனால் அதிர்ஷ்டத்தை நம்பும் இந்த இடங்களில் கவனமாக செயல்படுவதே நல்லது !!

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...