Monday, December 25, 2023

GENERAL TALKS - ப்ராடக்ட்டை சேல்ஸ் பண்ணி முடித்தாலும் கன்ட்ரோல் பண்ணும் கலை !!


இந்த பிரச்சனையை நீங்கள் கவனத்தில் எடுத்தே ஆகவேண்டும். இப்போது நீங்கள் ஒரு தரமான பைக்கை குறைவான விலைக்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம் அந்த பைக் உடைய 36500/- ரூபாய் என்கிறார்கள். ஆனால் இங்கேதான் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. இப்போது நீங்கள் ஒரு கடைக்கு சென்று ஒரு கப் காப்பி வாங்கினால் அந்த காப்பியின் விலையான 20 ரூபாய்யை கொடுத்ததும் அந்த காப்பி உங்களுக்கு சொந்தமாக மாறிவிட்டது. இப்போது அந்த பொருள் உங்களுடையது. நீங்கள் செலவு செய்யலாம். அந்த காப்பியை விற்ற கடைக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. (சர்க்கரை போதவில்லை என்றால் கடையில் கொஞ்சம் சர்க்கரை போட்டு கொடுங்கள் என்று நீங்கள் மாஸ்டரிடம் கேட்கலாம் ஆனால் பொருள் வாங்கல் விற்றல் என்ற முறையில் அந்த 20 ரூபாய் மதிப்புள்ள பொருள் உங்களுக்கு விற்கப்பட்டு உள்ளது , இனிமேல் அந்த பொருள் உங்களுடையது என்பதை நினைவில் கொள்க !! ) இப்போது கதைக்கு வரலாம். அந்த பைக் நீங்கள் ஒட்டவேண்டும் என்றால் அந்த பைக் உடன் கொடுக்கபட்டும் மேப்ஸ் வசதிகள் , பாடல்கள் கேட்டுக்கொள்ளும் வசதிகள் , படம் பார்க்கும் வசதிகள் , ஃபோன் சார்ஜ் போடும் வசதிகள் , பேட்டரி வசதிகள் என்று எல்லாமே உங்களுக்கு கிடைக்க நீங்கள் தினமும் 50 ரூபாய் கட்ட வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் இந்த பணத்தை கட்டினால்தான் உங்களுக்கு இந்த பைக் விற்கப்படும் இல்லையென்றால் உங்களுக்கு இந்த பைக் விற்கப்பட மாட்டாது என்று உங்களை கட்டாயப்படுத்தி தினம் தினம் 50 ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்ற கட்டுப்பாடுடன் வண்டியை உங்களுக்கு விற்கின்றார்கள். இப்போது மறுபடியும் 2 வருடங்கள் கழித்து உங்களுடைய வீட்டுக்கு அந்த பைக் விற்ற கடைக்காரர்கள் வந்து "டேய்.. காசு கொடுக்காத நாயே ! உன்னுடைய தினம் 50 ரூபாய் காசை கொடுக்காமல் போனதால் உன்னுடைய பைக் இனிமேல் எங்களுக்கு சொந்தம் , இனிமேல் மிஞ்சிய கடனுக்கு எங்களின் ஆட்கள் வருவார்கள் , கடனை கொடுக்கவில்லை என்றால் உன்னுடைய வீட்டை எடுத்துக்கொண்டு உன்னை நடுத்தெருவில் நிறுத்திவிடுவோம்" என்று மிரட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும். இதுதான் இப்போது புதிய கம்பெனி எலெக்ட்ரிக் வண்டிகள் மற்றும் டெக்னாலஜி வண்டிகளில் நடக்கிறது. ஒரு ப்ராடக்ட்டை விற்ற பிறக்கும் அந்த ப்ராடக்ட்டின் மொத்த கன்ட்ரோல் அந்த கம்பெனியிடம் இருக்கும் அளவுக்கு பார்த்துககொள்கிறார்கள். இந்த வகையில் அவர்கள் உங்களுக்கு பொருளை விற்பதில்லை , உங்களுக்கு அந்த பொருளை வாடகைக்கு விடுகிறார்கள். இந்த மாதிரியான மக்களின் சக்தியை உறிஞ்சக்கூடிய ஒரு செயல்முறையை கண்டிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக கண்டிக்க வேண்டும். இது போன்று பணத்தை பகல் கொள்ளை அடிக்கும் விஷயங்களை கண்டிப்பாக அனுமதி கொடுக்கவே கூடாது. தனியார் நிறுவனங்கள் அதிகாரங்களை எடுத்துக்கொள்வதை எப்போதுமே அனுமதிக்க கூடாது. இப்படி அனுமதிப்பது மிகப்பெரிய தவறு !! 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...