Tuesday, December 5, 2023

CINEMA TALKS - பெர்சனல்லாக பிடித்த 10 திரைப்படங்கள் - P.3 - [6-7]

06. TEENAGE MUTANT NINJA TURTLES - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 

 TEENAGE MUTANT NINJA TURTLES - இதுவுமே ஒரு சூப்பர் ஹீரோ படம்தான் , பறந்து பறந்து அடிக்கும் காட்சிகள் என்று எல்லா ஸ்டண்ட்களும் இந்த படத்திலும் உள்ளது ஆனால் மற்ற படங்களோடு சேர்த்துப்பார்த்தால் இந்த படம் ரொம்ப யூனிக்கான படம். இந்த படத்துடைய அடுத்த பாகம் சோதப்பிவிட்டது என்பதுதான் என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. இப்போது இந்த கதைக்கு வருவோம் , இன்வெஸ்டிகேஷன் ஜேர்னலிஸ்ட் ஏப்ரல் ஓ நேய்ல் அவர் வாழும் நகரத்தை கார்டியன்ஸ் போல யாரோ ஒரு அமைப்பு கிரிமினல்ஸிடம் இருந்து காப்பாற்றுவதை கண்டுபிடிக்கிறாள். ஆனால் அந்த அமைப்பு நம்ம மனிதர்களை போலவே புத்திசாலித்தனமும் அபார வேகமும் திறன்களும் உள்ள ஆமைகள் என்றும் அவளுடைய அப்பாவின் ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்ட இவர்கள் இப்போது வளர்ந்து இந்த நகரத்தை காப்பாற்றும் அளவுக்கு பெரிய சாதனைச்செல்வர்களாக மாறியிருப்பதையும் தெரிந்துகொள்கிறாள். இந்த கூட்டணி சேர்ந்து வரப்போகும் பெரிய ஆபத்தை எப்படி தடுக்கிறது என்ற கதைதான் இந்த நின்சா டர்ட்டல்ஸ் , இந்த படத்துடைய எக்ஸிக்யூஷன் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் ஆக்ஷன் அட்வென்சர் என்று படத்தை ரொம்ப வேகமாக கொண்டுபோய் இருப்பார்கள்.  


07. THE DISASTER ARTIST - TAMIL REVIEW -  திரை விமர்சனம் !!

 

இந்த படம் எனக்கு எதனால் பேர்ஸனல் ஃபேவரட் என்றால் வெளிநாட்டில் சினிமாவில் ஹீரோவாக ஆசைப்படும் TOMMY WISEU ஒரு ஹீரோ ஆவதற்க்கு தேவையான விஷயங்களை தவிர்த்து மற்ற எல்லா விஷயங்களையும் கொண்டு இருப்பதாக சொல்லி நிறைய ப்ரொடக்ஷன் கம்பெனிகளில் மறுக்கப்படுகிறார். அவருடைய வாழ்க்கையில் அவருடைய நடிப்பு மற்றும் வாய்ஸ் அடிப்படையில் யாரைபோலவும் இல்லாமல் ஒரு தனித்த ஸ்டைல்லில் இருப்பதால் அவராகவே புதிய நண்பர் GREG SESTRO வின் ஐடியாவால் ஈர்க்கப்பட்டு கதை சுமாராக இருந்தாலும் பேர்ஃப்பார்மேன்ஸில் பின்னிவிடலாம் என்று THE ROOM என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். அடுத்து நடந்தது எல்லாம் வரலாறுதான். படம் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் !!

No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...