Wednesday, December 6, 2023

CINEMA TALKS - MINORITY REPORT - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



 ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இவ்வளவு தெளிவாகவும் நேர்த்தியாகவும் எடுக்க முடியும் என்றால் அது நம்ம ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கால்தான் எடுக்க முடியும், மைனாரிட்டி ரிப்போர்ட், ஃப்யூச்சர்ல குற்றங்களை தடுக்க PRECOGS என்ற எதிர்காலத்தை கணித்து நினைவுக்களை வீடியோ காட்சிகளாக கொடுக்கும் சக்திகளை கொண்ட மூன்று பெண்களின் மூளையை இணைத்து எதிர்காலத்தில் நடக்கப்போகும் எல்லா விஷயங்களையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் காவல்துறை எல்லா குற்றங்களையும் தடுத்து சம்மந்தப்பட்டவர்களை குற்றங்கள் நடப்பதற்கு ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாள் முன்னதாகவே கைது பண்ணிவிடுகிறது. இதனால் குற்றங்களே நடக்கவில்லை. ஆனால் கைது பண்ணவேண்டிய காவல் துறை அதிகாரியே நாளைக்கு ஒரு கொலையை பண்ணப்போகிறார் என்றால் அடுத்து என்ன நடக்கும் ? படத்தை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். டாம் க்ருஸ் பிரமாதமாக நடிப்பை கொடுத்து இருக்கிறார். அவருடைய சொந்த பையனை கொன்றவனை கொல்ல வேண்டும் என்று செல்லும் அப்பாவாக கோபமாக இருந்தாலும் கடைசி நேரத்தில் எதிர்கால விஷுவல்களையும் மறுத்து வெறும் அரேஸ்ட் மட்டுமே பண்ணும் காட்சி குறிப்பாக வேற லெவல் . ஹாலிவுட்டின் பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் என்று இந்த படத்தை தாராளமாக சொல்லிவிடலாம் என்றால் அது தப்பே இல்லை. இன்னைக்கு என்னால் ஒரு விஷயத்தை கவனிக்க முடிகிறது சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் ப்ரொடக்ஷன் வேல்யூ குறைவாகவும் மினிமலிஸம் அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. IN TIME , UPGRADE , போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம் ஆனால் பெரிய ப்ரொடக்ஷன் வேல்யூ இருக்கும் படங்களை பார்ப்பது என்றால் அதனுடைய அனுபவமே தனியானது. மாட்ரிக்ஸ் படத்துக்கு அப்புறமாக இந்த ஜேனரில் வெளிவந்த ஒரு நல்ல பெரிய பட்ஜெட் படம் இந்த படம் என்று சொல்லலாம். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...