"நம்ம மனசுக்கு பிடித்த நிறைய பாடல்களை நாம் கேட்டிருப்போம் அந்த வகையில் தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த பாடல்களின் ஒரு தொகுப்பு இந்த "மனதை தொட்ட பாடல்கள்" என்ற வலைப்பூ. முதலாக உன்னை கண்டேனே முதல் முறைதான் பாடல்.. 2006 களில் வெளிவந்த பாடல்களில் ரொம்பவுமே மென்மையான ஒரு பாடல் இந்த பாடல். இந்த பாடல் ரொம்பவுமே சாஃப்ட் ஆக மேலோடியாக இருக்கும் இந்த பாடல் 2006 களில் வெளிவந்தபோது செம்ம ஹிட் ஆன பாடல், இந்த பாட்டு கேட்கும்போது இந்த பாடல் அடுத்த "வசீகரா" அல்லது "புது வெள்ளை மழை" பாடலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பாட்டு மட்டும் ஒரு தனியான கேட்கும் அனுபவம் கொடுக்கிறது. ORU GOOD COMPOSING எனலாம்.
சன் மியூசிக்-ல் சட்டென்று கிட்டார் வாசித்து "இது பற்றி பாயும் பாமாலை"
அப்படின்னு சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற "தேநீரில் ஸ்நேகிதம்" பாடல் கேட்க ஆரம்பித்தாலே இன்றைக்கும் கல்லூரி நட்பு வட்டாரங்கள் சேர்ந்திருந்த அந்த காலம் நினைவுக்கு வந்துவிடும். உண்மை என்னவென்றால் விஜய் டிவி "கனா காணும் காலங்கள்" தொடர் வெளிவந்த காலத்தில் வெளிவந்த இந்த பாடல் இன்னைக்கும் அதனுடைய புதுமையான தடங்களை மனதுக்குள் பதிவு செய்யாமல் இருப்பதில்லை..
இந்த பாடல் "பேசு" என்ற வெளிவராத திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இந்த பாடல் டிரெண்டிங் மியூசிக்களில் இன்று கூட பட்டியலில் இடம்பெற்றுவிடும் "வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்" ஒரு இன்டர்நேஷனல் லெவலில் இருக்க கூடிய கம்பொசிங் செய்யப்பட்ட தமிழ் பாடல். இந்த பாடல் சில நூறு முறை கேட்டாலும் சலிக்காத ஒரு அருமையான பாட்டு. கண்டிப்பாக ஒரு முறை கேட்டு பாருங்கள். இந்த பாட்டுக்கு அப்படியே OPPOSITE "ஜூன் போனால் ஜூலை காற்றே" பாடல்.
"வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா ? பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா ? அன்பே உந்தன் பேரைத்தான் விரும்பிக் கேட்கிறேன் போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்" இந்த பாட்டு வேற லெவல். இந்த பாட்டு "உல்லாசம்" என்ற 1997 ல் வெளிவந்த திரைப்படத்தில் வெளிவந்தது.. என்றைக்கக்காவது இந்த பாடலை ஹெட்போனில் போட்டு கேட்டாலும் ஒரு மறக்க முடியாத RETRO நினைவை கொடுத்துவிட்டு செல்லக்கூடிய பாடல்.
" சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சிரிக்கத் தோணுதே சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே சற்று முன்பு கேட்ட பாடல் பாடத் தோணுதே வெட்கமின்றி ஆடத் தோணுதே" பாடல் வரிகளை கேட்டதும் M. கிப்ரான் அவர்களது இசையில் வெளிவந்த இந்த பாடல் நினைவுக்கு வந்துவிடும் "குறு குறு கண்ணாலே காதலை சொன்னாளே" -
No comments:
Post a Comment