இந்த படம் மாதிரி ரசிக்கும்படியான நகைச்சுவையான படம் இன்னைக்கு வரைக்கும் நான் பார்த்ததே இல்லை, இப்போது காதலா ! காதலா ! , ஒரு கல் ஒரு கண்ணாடி , பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியான முழு நீள நகைச்சுவையான படங்களை எல்லாம் பார்க்கும்போது இந்த படம் ரொம்ப புதிய ஜேனராக இருந்தது. இந்த படத்துடைய கதை , சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு இருப்பவர்தான் தாஸ் , இவரை அந்த ஏரியாவில் நைனா என்று சொல்லுவார்கள் , எதிரிகளால் நிறைய முறை கொலை முயற்சி பண்ணப்பட்டாலும் நேருக்கு நேராக சண்டைபோட்டு ஜெயித்துக்கட்டுகிறார் , இவரை தோற்கடிக்க எதிரிகளின் சதி சென்றுக்கொண்டு இருக்கும்போது இவருடைய பழைய நண்பன் பெஞ்சமின்னின் பையனான ஜானிக்கு இரத்ததை பார்த்தாலே வலிப்பு வரும் என்று தெரியாமல் பெரிய பில்ட்டப் கொடுத்து இவருடைய மகள் ஹேமாவுக்கு திருமணம் பண்ணிக்கொடுத்துவிடுகிறார்கள். இப்போது எதிரிகளை நேருக்கு நேராக எதிர்த்து சண்டை போட முடியாத நிலையில் சிறையில் இருந்து வெளியே வரும் பென்சமின்னின் உதவியுடன் எப்படி எதிரிகளை தோற்கடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை, இந்த படத்தின் காமிரா வொர்க் , மியூசிக் , ப்ரொடக்ஷன் வேல்யூ , நடிப்பு ,பாடல்கள் என்று எல்லாமே பிரமாதமாக இருக்கிறது. இந்த படத்தோடு எந்த படத்தையும் கம்பேர் பண்ண முடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் நிறைய நகைச்சுவை காட்சிகள் இருக்கிறது. நல்ல கலகலப்பான படம், கண்டிப்பாக எல்லோருமே ஒரு முறை பார்க்க வேண்டிய படம் இந்த படம்.
No comments:
Post a Comment