Monday, December 18, 2023

GENERAL TALKS - இன்னும் நிறைய பிரச்சனைகள் !!

 



இங்கே இப்போதைக்கு இந்த கடைசி 3 வருடங்கள் பற்றி என்னுடைய பேர்சனல் அனுபவங்களில் இருந்து சொல்லவேண்டும் என்றால் என்னை போல டெக்னாலஜி கம்பெனியை தொடங்க முயற்சிப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. இந்த விஷயத்துக்காக நீங்கள் நிறைய கஷ்டப்பட வேண்டியது வரும். இந்த காலத்தில் கம்பேனிக்களின் இலாப நோக்கத்துக்கு கணக்கு இல்லாமல் சென்றுகொண்டு இருக்கிறது. இவர்கள் மக்களுக்கு தரம் இல்லாத ப்ரோடெக்ட்களை தயாரித்து கொடுத்துவிட்டு அந்த ப்ரோடெக்ட்கள் விற்காமல் இருந்தால் அவர்களுடைய தலையிலேயே நஷ்டத்தையும் கட்ட பார்க்கின்றார்கள். நீங்கள் சமீபத்தில் ஒரு நியூஸ் கேள்விப்பட்டு இருக்கலாம். ஃபோன்கள் மற்றும் லேப்டாப்களின் சேல்ஸ் உலக அளவில் குறைந்துவிட்டது என்ற நியூஸ். அடிப்படையில் பிரச்சனைக்கு காரணம் என்ன ? இது குறித்து நான் இன்டெர்நெட்டில் தேடும்போது இந்த சேனல்லில் இருக்கும் லூயிஸ் ரோஸ்மன் அவர்கள் மிகவும் சரியான விளக்கங்களை கொடுத்தார். இந்த சேனலை கண்டிப்பாக சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், இப்போது பாயிண்ட்க்கு வருவோம். இந்த காலத்தில் கடினமான உழைப்பு பண்ணி பணம் சம்பாதிப்பவர்களை எல்லாம் ரொம்பவும் இளக்காரமாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு ஸிம்பில் ஆன வேலையை பண்ணி பணம் சம்பாதிப்பவர்களைத்தான் கெத்தாக பார்க்கிறார்கள். சமீபத்தில் சாத்துக்குடி கம்பெனியின் தென்னந்தோப்பு வகையறா ஃபோன்களில் வாங்கிய மூன்றே மாதத்தில் டிஸ்ப்லே போய்விட்டது என்றால் நேரடியாக சேர்வீஸ் சேன்டர் கொண்டு போனாலும் 30000 /- ரூபாய் பணம் கேட்கிறார்களாம். வாரேன்டி செல்லதாம் ! ஃபோன்னில் இருக்கும் அனைத்து டேட்டாக்களையும் டெலீட் பண்ணிவிடுவார்களாம் !! அப்படியென்றால் என்ன கூந்தலுக்கு உங்கள்  தென்னந்தோப்பு ஃபோன் வாங்க வேண்டும் என்று கேள்வி வருகிறது அல்லவா ? இன்டர்நெட்டில் இன்னும் நிறைய தகவல்கள் கிடைத்து இருக்கிறது. இது வெறும் ஆரம்பம்தான், பெரிய தலை OTT தளங்கள் (காசு கொடுத்து வாங்கிய படங்கள்) சந்தா கட்டி பேர்ச்செஸ் பண்ணிய படங்களை அதுகளே டெலீட் பண்ணிவிட்டு கேட்டால் காண்ட்ராக்ட் முடிந்துவிட்டது அந்த படம் இனிமேல் இன்னொரு ஆபபில் இருக்கும் அந்த ஆப்க்கு காசு கட்டி பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்களாம் ! கார் கம்பெனிக்கள் டிராக்டர் கம்பெனிக்கள் அவர்களின் தயாரிப்புகளை வாடகைக்கு விடுவது போன நடந்து கொள்கிறார்களாம். நிறைய கம்பெனிக்கள் மெஷின்னில் சின்ன பழுது என்றால் ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றாமல் மெஷினையே மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்களாம். காசு போட்டு வாங்கிய சாப்ட்வேர் பி. சி. யில் வேலை செய்யவில்லையாம் ஆனால் பைரேட் பண்ணிய சாப்ட்வேர் ஜம்முன்னு வேலை பார்க்கிறதாம். இன்னைக்கு தேதிக்கு ஃபோன் வாங்குவதில் அடிப்படை பிரச்சனை இருக்கிறது அதனை இன்னொரு தனியான கட்டுரையில் சொல்கிறேன். இன்னும் கம்பெனிக்கள் காசு கிடைத்தால் போதும் என்றும் பொருளை வாங்கிய இளித்தவாயன் அந்த பொருளுக்கு பில் கட்டினால் போதும் என்று என்னேன்னமோ பண்ணுகிறார்கள். கார் கம்பெனி அந்த காரோடு இணைக்கப்படும் ஃபோன்னின் மொத்த தகவலையும் அள்ளிக்கொள்ள பேர்மிஷன் கேட்டால்தான் வேலை பார்ப்பேன் என்று அடம்பிடிக்கிறது. இவர்களை பொறுத்தவரை கல்யாணத்துக்கு காத்துக்குத்துக்கு என்றால் சொந்தக்காரங்களை அழைக்கும் கால் மற்றும் மெசேஜ்களை கூட ஒட்டி கேட்டு நோட்ஸ் எடுத்துக்கொள்ள பேர்மிஸன் கொடுக்க வேண்டும். காடுகள் கம்பெனியின் பேசும் பெட்டியை வாங்கினால் குடும்பத்தில் நீங்கள் பேசும் அனைத்தையும் ஓட்டு கேட்டு கம்பனிக்கு காப்பி போட கேஸட்  கேஸட்டாக அப்லோட் பண்ணிவிடுகிறதாம். மேலும் சைக்கிள் தவிர்த்து எல்லா வண்டிகளுக்குமே ஒரு சின்ன தப்பு என்றாலும் நம்மால் சரிபண்ண முடியாத அளவுக்கு கம்ப்யூட்டர் சிப்களை கொடுக்கிறார்கள். இப்படி கம்ப்யூட்டர் சிப் கொடுக்கப்பட்டால் ஒரு சின்ன தப்பு ஆனாலும் கூட ஒரு நட்டு சரி பண்ணினால் கூட வண்டி வேலை செய்யும் என்றாலும் அருகில் இருக்கும் சர்வீஸ் சேன்டருக்குதான் கொண்டு போக வேண்டும். மொத்தத்தில் ஒரு காலத்தில் விவசாயம் பார்ப்பது போல நேர்மையாக இருந்த கம்பெனிக்கள்  எங்கே ? இப்போது கஸ்ட்டமரை பணவேட்டையாடவேண்டும் என்று வில் அம்புகளுடன் அலைந்துகொண்டு இருக்கும் கம்பெனிக்கள் எங்கே ? இவர்களை கட்டுப்படுத்த வேண்டும் இல்லை என்றால் அதிகாரத்தை கப்பல் போல கவிழ்த்துவிடவும் பார்ப்பார்கள் !! இன்றைக்கு தேதிக்கு பிரச்சனைகளுக்கா பஞ்சம் என்று இந்த 2023 ஆம் வருடம் சென்றுவிட்டது. அடுத்த வருடத்தில் என்னென்ன கொடுமைகள் காத்து இருக்கிறதோ !!

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...