Monday, December 11, 2023

THE CLIMATE RANT - CLIMATE CHANGE IN TAMIL - ஒரு தமிழ் கட்டுரை !!

 கிளைமேட் சேஞ்ச் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. இது வரைக்குமே நடந்த சம்பவங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இனிமே நீங்கள பண்ணவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு புத்தகம் அளவுக்கு இந்த பிரச்சனையை சரிபண்ணக்கூடிய எல்லா விஷயங்களையுமே எழுதவேண்டும். நடந்தது நடந்துபோச்சு முடிந்தது முடிஞ்சுபோச்சு, உங்களுடைய வீடு , நீங்கள் வாங்கிய கார், பைக் , அல்லது எந்த பொருட்களாக இருந்தாலும் கிளைமேட் சேஞ்ச்சின் காரணமாக நடக்கும் பொருளாதார வீழ்ச்சி அடிப்படையில் உருவாகும் பிரச்சனையாக இருக்கட்டும் (வேலைவாய்ப்பு இழப்பு , பணம் இல்லாமல் பொருட்களை அடமானம் வைக்கும் நிலை ) இல்லையென்றால் சுற்றுப்புற மாற்றத்தால் நடக்கும் பிரச்சனைகளாக இருக்கட்டும் (வெள்ளம் , கனமழை , இயல்பு வாழ்க்கை பாதிப்புகள் ) இந்த இரண்டு வகை பிரச்சனையும் கிளைமேட் சேஞ்ச் காரணமாக மட்டும்தான் நடக்கிறது. இன்னைக்கு தேதிக்கு நீங்கள் யோசித்தால் கூட இந்த விஷயத்தை வெற்றி அடைவது எல்லாமே கனவில் கூட நடக்காத சாதனையாக இருக்கலாம் ஆனால் இந்த விஷயத்தை வெற்றி அடைந்தே ஆகவேண்டும். இங்கே நமக்கு நிறைய சப்போர்ட் தேவை , உலகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் நமக்கு நிறைய மனிதர்களின் இணைக்கப்பட்ட ஒரு பெரிய அமைப்பு தேவை. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ? நம்முடைய சூரியனிடம் இருந்து பகலில் பெறும் வெளிச்சத்திலும் வெப்பத்திலும் எவ்வளவு பேர்ஸன்டேஜ் நமது பூமி சேர்த்து வைத்துகொள்கிறது என்று தெரியுமா ? 0.1 சதவீதம் கூட சேர்த்து வைப்பது இல்லை. வெப்பத்தையும் ஒளிக்கதிர்களையும் அவைகளின் வலிமையை குறைத்து மீண்டும் வானத்துக்கே அனுப்பிவிடுகிறது. ஆனால் பசுமை இல்ல விளைவு நடக்கும்போது கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் இன்னும் சில வாயுக்கள் இந்த வெப்பத்தை இரவு நேரங்களில் வெளியே போவதை தடுத்து பூமியின் குறிப்பிட்ட பகுதிகளை வெப்பமான கிளைமேட்டாக மாற்றிவிடுகின்றன ! இந்த விஷயம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தால் என்ன நடக்கும் ? பூமி கண்டிப்பாக அழிந்துவிடும். இதுபோன்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உடனடியாக சரிபண்ணியாக வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...