ஒரு ஏழை பையன் ஒரு பணக்கார ஆளுடைய காரை தொட்டு பார்த்ததுக்கு என்னுடைய 50 லட்சம் ரூபாய் காரை தொட்டு பார்த்தியா என்று அந்த காரை ஒட்டிய பணக்காரன் பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளான் ! கடவுள் இங்கதான் தப்பு பண்ணுறாரு, அவருடைய சப்போர்ட் அந்த பணக்காரனுக்குதான் என்றால் அடிப்படையில் இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட ஏழைக்கு யாரு பண்ணுவாங்க ? இந்த பிரச்சனை காலகாலமா நடந்துட்டு இருக்கு. இந்த பையனுக்கு ஜஸ்டிஸ் கிடைக்கணும். இந்த பையன் ஜெயிக்கணும். இன்னைக்கு தேதிக்கு நம்ம வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் மட்டுமே போதுமானது அடுத்தவங்க வாழ்க்கை என்ன ஆனாலும் ஒரு கவலையும் இல்லை இல்லையா ? இன்னைக்கு நானோ பாட்ஸ் வைத்து தாக்குவது எப்படி , கெமிக்கல் வைரஸ் வைத்து கொத்து கொத்தாக தூக்குவது எப்படி என்று இதேதான் பேச்சு மேலே பேச்சு. என்னைக்காவது விவசாயத்தை காப்பாத்த என்ன பண்ணலாம் , போலியூஷனை குறைக்க என்ன பண்ணலாம் ? கடலை பிளாஸ்டிக்ல இருந்து காப்பாற்றி சுத்தம் பண்ண என்ன பண்ணலாம் என்று எதுவுமே யோசிக்கவே இல்லையே. இந்த உலகம் கம்பெனிகளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு மனிதத்தன்மையே இல்லாமல் நடந்துகொள்கிறது. டேய் என்னடா உலகம் இது ? என்னேன்ன் பண்ணி வெச்சு இருக்கீங்க ! ஒரு பக்கம் என்னடானா எவனோ ஒருத்தன் என்கிட்ட அதிகமான பணம் இருக்கு அதனால மனுஷன் மண்டைக்குள்ள தி மாட்ரிக்ஸ் படம் கணக்கா சிப்பு வைக்க போறேன் அப்படிங்கறான் அதுக்கு அப்ருவ ல் கொடுக்கறீங்க ! இன்னொரு பக்கம் வெறும் இரண்டு பொதுவான வார்த்தை பேசிட்டாருன்னு அவரை போய் என்னோட கம்பெனிக்கு உரிமை வாங்கின பாட்டுல நீ பேசுன அந்த இரண்டு வார்த்தை இருக்கு அதனால இந்த வீடியோல வர காசு மொத்தமும் எனக்குதான் சொந்தம்ன்னு பகல் கொள்ளை அடிக்கறீங்க ! நான் பூமி என்ற படத்தை பார்த்தேன். ஒரு பெரிய கம்பெனி ஜெயிக்கணும்னா சின்ன சின்ன தொடக்கத்தில் இருக்கும் யாரை வேண்டுமென்றாலும் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளிவிடுவது போல கீழே தள்ளிவிடலாம் அந்த அளவுக்கு உங்களுக்கு உரிமைகள் இருக்குனு சொல்லிக்கறீங்க. இதனால நான் என்ன சொல்லறேன்னா டேய் உலகமே நீ நாலு பேருக்கு நல்லது பண்ணிட்டு இருக்கறதால உன்னை மன்னிச்சுவிட்டுட்டு மக்கள் போய்ட்டு இருக்காங்க. ஆனால் நீ என்னடான மட்டமான ஆட்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு உன்னை காப்பாத்தியவர்களையே உனக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சுமத்தி இளக்காரம் பார்க்கற இப்படியே போனால் கோபம் அதிகமாகும் எங்கே பார்த்தாலும் நெருப்பு எரியும். நீயும் அப்படி கோபப்பட்ட மக்களால் பரிதாபமாக உயிர் உடல் உடமைகள் எல்லாமே கண்கள் முன்னாடியை சாம்பலாக போகும் காலத்தில் இருக்கவேண்டியது இருக்கும். கோபத்தை சாதாரணம் என்று எடை போடாதே, நீ கொடுக்கும் ஒரு ஒரு கஷ்டமும் பெட்ரோல் போல மனசுக்குள் கோபத்தை அனலாக நெருப்பாக கொதிக்கவிடுகிறது, இங்கே நீ மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டால் மன்னிப்பு கொடுக்கப்படாமல் வறுக்கப்படுவாய். கெட்டவர்கள் என்னைக்குமே நல்லவர்களால் தோற்கடிக்கப்படுவது கிடையாது. அவர்களை விடவும் கெட்டவர்களாக மாற்றப்பட்ட மியூட்டன்ட் வேரியன்ட்டாக இருந்த கடந்த கால நல்லவர்களால்தான் தோற்கடிக்கப்படுகிறார்கள். இந்த உலகத்தில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் ஆசைப்பட்டுக்கொள்ளுங்கள் ஆனால் ஒரு மனுஷனுடைய மோசமான வெர்ஷன்னை பார்க்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்பட்டுவிடாதீர்கள். அப்படி ஒரு மோசமான வெர்ஷன்னில் ஒரு மனிதன் களத்தில் இறக்கப்பட்டால் உலகமே நடுங்கி நடுங்கி சாவு பயத்தில் தூக்கத்தில் இறந்துவிட மாட்டோமா என்று கெஞ்சிக்கொண்டு இருக்கும் அளவுக்கு அந்த மனிதன் பயமுறுத்தும் கொடூரமான நம்பர் #1 சக்திவாய்ந்த கெட்ட கடவுளாக இருப்பான். பாரபட்சம் பாவம் புண்ணியம் பார்க்காமல் அவன் பண்ணும் செயல்கள் எல்லாம் கொடூரத்தன்மை நிறைந்ததாக இருக்கும்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SCIENCE TALKS - ARIVIYAL TAMIL #6 - கணினி வன்தகடுகள் எளிதில் உடையும் கருவிகளா ?
ஹார்ட் டிஸ்க் தோல்விகள் பொதுவாக தர்க்கரீதியான கோளாறுகள் (Logical failures) மற்றும் இயந்திரக் கோளாறுகள் (Physical Mechanical Failures) என இரு...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
டிஸ்னி நிறுவனம் தனது ஒட்டுமொத்தப் பூங்காக்கள் மற்றும் அனுபவங்கள் (Experiences) துறையிலிருந்து 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் $36 பில்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக