செவ்வாய், 5 டிசம்பர், 2023

CINEMA TALKS - 36 VAYATHINILE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



இன்னைக்கு தேதி வரைக்கும் ஃபேமினிஸ்ட்டாக வெளிவந்து வெற்றி அடைந்த தமிழ் படங்கள் கொஞ்சமதான், எனக்கு தெரிந்து ஒரு வருடத்தில் அதிகபட்சம் 300 தமிழ் படங்கள் வருகிறது என்றால் இப்போது எல்லாம் நிறைய படங்களில் ஆப்ஜேக்டிஃப்பிக்கேஷன் ஆஃப் வுமன் என்ற விஷயத்தை எடுத்து இருக்கிறார்கள். பெண்கள் நம்ம மனித இனத்தில் எப்பொதுமே ஆண்களுக்கு மேலாக இருப்பவர்கள் என்பதுதான் என்னை கேட்டால் என்னுடைய தனிப்பட்ட கருத்து. இன்றைக்கு தேதிக்கு சமுதாயம் பெண்கள் அவர்களாகவே அன்பினால் கனிவாக நடந்துகொண்டால் பெண்கள் அவர்களுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்தேவிட்டார்கள் என்று முடிவு பண்ணுகிறது. இந்த பிரச்சனையை மையப்படுத்தி ஒரு படம் வராதா என்று எதிர்பார்த்த எனக்கு கண்டிப்பாக சர்ப்ரைஸ் கொடுத்த படம் 36 வயதினிலே. இந்த படத்தில் கணவன் - மனைவி - குடும்பம் என்று ஒரு ஃபேமிலியில் வாழும் பெண்ணாக குடும்பத்தலைவி கல்லூரியில் இருந்த அந்த துணிவான பெர்ஸனாலிட்டியை விட்டுக்கொடுத்துவிடுகிறாள். ஆனால் பல வருடங்களுக்கு பின்னால் விவசாயம் சார்ந்த ஒரு ஸ்டார்ட் அப் பண்ணவேண்டும் என்று நினைக்கும்போது குடும்பத்தில் இருந்து நிறைய எதிர்ப்பு வருகிறது. எப்படி பிரச்சனைகளை கடந்து சாதித்து காட்டுகிறாள் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது. கண்டிப்பாக எல்லோருமே ஒரு முறை பார்க்க வேண்டிய படம். நம்ம சினிமாவில் ரொம்ப முக்கியமான ஃபேமினிஸ்ட் படம் (இங்கிலீஷ் வின்க்லிஸ் படத்துக்கு பின்னால் இன்னொரு நல்ல படம்).  ஒரு குடும்பத்தலைவி குடும்பத்துக்காக தன்னுடைய வாழ்க்கையை விட்டுக்கொடுத்தால் அவளுக்கு இன்னும் நிறைய மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும். இதுதான் இந்த படத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  விஷயமாக இருக்கிறேன். எத்தனையோ இல்லங்களில் சாமர்த்தியமான முடிவுகளால் மற்றும் பொறுமையால் குடும்பத்தலைவிகள் சாதித்து காட்டி இருக்கிறார்கள். எல்லா குடும்பத்திலும் பெண்கள் முன்னேற்றத்தை சப்போர்ட் பண்ண வேண்டும். ரேஜேக்ட் பண்ண யாருக்குமே உரிமை இல்லை. 

கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...