Monday, December 4, 2023

CINEMA TALKS - MGR MAGAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 கதையை விட்டுவிடுங்கள். ஒரு கலகலப்பான கிராமத்து நகைச்சுவையுடன் இருக்கும் காதல் கதை. சத்யராஜ் , எம்.சசிக்குமார், சமுத்திரக்கனி என்று சிறப்பான கதாப்பாத்திரங்களில் செலெக்ஷன். குறை சொல்ல முடியாத ப்ரோடக்ஷன் வேல்யூ. மொத்தத்தில் இந்த படம் நிறைய பொழுதுபோக்கு விஷயங்களுடன் வெளிவந்து கம்மெர்ஷியல் ஆடியன்ஸ்க்காக கொடுக்கப்பட்ட ஒரு படைப்பு. படத்துக்கு பொடென்ஷியல் நிறைய இருந்தாலும் இதே ஜெனரில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் , போன்ற படங்களுடன் கம்பேரிஸன் என்று பார்த்தால் ஆடியன்ஸ்க்கு என்னென்ன விஷயங்கள் பிடிக்கும்‌ என்பதில் கணித்ததை வைத்து திரைக்கதை எடுப்பதில் கொஞ்சம் மிஸ்பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். மற்றபடி குறையென்று எதுவுமே சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு கமெர்ஷியல் படம் ! இந்த மாதிரியான படங்களை பற்றி நான் இந்த வலைப்பூவில் எப்போதுமே ஒரே விஷயம்தான் சொல்லுவேன். ஒரு சில கமெர்ஷியல் படங்களுக்கு அருமையான கதை கிடைத்து இருக்கும். கதைக்கு நல்ல பொடென்ஷியலும் இருக்கும் ஆனால் படத்தில் கொஞ்சம் கொஞ்சம் விஷயங்களை மட்டும் சொதப்பி வைத்து இருப்பார்கள். அதுவே படத்துடைய வேல்யூவுக்கு பின்னடைவாக இருந்துவிடுகிறது. இருந்தாலும் DSP படத்தின் கிளைமாக்ஸ்ஸை எல்லாம் வைத்து கம்பேர் பண்ணினால் இந்த படம் ரொம்ப நன்றாகவே கிளைமாக்ஸ்ஸை கொடுத்து இருக்கிறார்கள். இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...